நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்- ஆபத்தான நிலையில் நபர்!

திருகோணமலை மவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற வாகனமொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில் அக்போபுர 87 ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் 36 வயதுடைய ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரனையிலிருந்து கந்தளாய் பகுதிக்கு Read More

Read more

திருகோணமலையில் முடக்கப்பட்ட மேலும் ஒரு பகுதி- இராணுவம் பொலிஸார் கடமையில்!

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் சுபதலங்கர மாவத்த தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீதிகளை மறித்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திருகோணமலையில் ஏற்கனவே பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

குளத்திற்கு குளிக்கச் சென்ற இரு சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (வயது-13) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 பிரதேசத்தைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (வயது-13) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் Read More

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு- இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

திருகோணமலைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்குடும்பப் பெண்ணே இவ்வாறு தற்கொலை முயற்சி மேற்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 25 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட மனைவி, கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று Read More

Read more

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த படகால் பதற்றம்!

திருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த நபர் கடந்த 25 ஆம் திகதி துவா என்ற படகிலேயே மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்றவர் திருகோணமலை ஆண்டாம்குளம் பகுதியைச் சேர்ந்த கலப்பதி ஆராச்சிகே ராண்டி ரதீசா லக்சான் என்பவர் எனவும் இவர் மார்ச் 31 ஆம் திகதி கடலில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், அவர் பயணித்த படகு Read More

Read more

திருகோணமலையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை- தலைமறைவாகியுள்ள ஐஸ் மஞ்சுவின் சகோதரர் பொலிஸார் வசம்!

திருகோணமலை நகரில் 38 இலட்சம் ரூபா பொறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேரை ஏற்கனவே பொலிஸார் கைது தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், திருகோணமலையில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் Read More

Read more