தற்காலிக கூடாரங்களை அகற்றியதால் நடு வீதியை வீடாக்கிய போராட்டகாரர்கள்!!

அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியதையடுத்து அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

Read more

காலி முகத்திடல் மைதானத்தில் பாரிய போராட்டம்!!

கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய காவல்துறை பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ​​ போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது. எவ்வாறாயினும், Read More

Read more

18 வயது மாணவி நடு வீதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை!!

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவி கொலைசெய்யப்பட்டமைக்கு காதல் விவகாரமே காரணம் என ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாடசாலை மாணவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை இன்று (09/03/2022) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.   சர்வதேச மகளிர் தினமான நேற்று மாணவி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

Read more

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

கணவரின் தாக்குதலால் மானைவி மரணம், பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு தீ மூட்டிய கணவர்!!

இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம பகுதியில் பெண் ஒருவர் தனது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது, கனமான பொருளினால் குறித்த கணவர் மனைவியின் தலையில் தாக்கியதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர் கோனார முதியன்சேலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தயா நிஷாந்தி ஹரிச்சந்திர ( 37 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரான கணவர் ( 27 Read More

Read more

தொடர்ந்து கொழும்பு கடற்பகுதியில் படையெடுக்கும் முதலைகள்!!

காலி முகத்திடல் கடற்பகுதியில் நேற்றைய தினம் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றாம் திகதி தெஹிவளை, தொடருந்து நிலையத்திற்கு அருகில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். எவ்வாறாயினும், தெஹிவளை கடற்பகுதியில் பிரவேசித்த முதலை இன்னும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்படவில்லை. மேலும், இந்நிலையில், காலி முகத்திடலில் நேற்றைய தினம் அவதானிக்கப்பட்ட முதலை சிறிய அளவுடையது எனவும், Read More

Read more

16 வயதான சிறுவன் தும்புத்தடியால் தாக்கப்பட்டு கொலை!!

காலி – மஹமோதர பகுதியில் 16 வயதான சிறுவன் தும்புத்தடியால் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு, காலி பிரதான நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய குறித்த சிறுவன் இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார். வீட்டில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணித்துத் தந்தையால் நேற்று பிற்பகல் Read More

Read more

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக Read More

Read more

இன்றும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் காற்று!!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய Read More

Read more

தலையில்லாமல் ஆணின் சடலம் மீட்பு!!

காலி சமுத்திர மாவத்தைக்கு அருகில் தலையற்ற நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்கதாக இந்த சடலம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலத்தை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more