வான் ஒன்றுடன் மோதியது பாரவூர்தி….. சிறுவன் மரணம் – 07பேர் படுகாயம்!!

திருகோணமலை – புத்தளம் வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (19/04/2022) திருகோணமலையில் இருந்து ஹொரவ்பத்தானை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வானில் பயணித்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் திருகோணமலை மற்றும் மகாதிவுல்வெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read more

14 வயது மாணவி அடித்து கொலை….. தந்தையும் தந்தையின் சகோதரனும் கைது!!

கம்பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறியதந்தை நேற்றைய தினம் அவரை தாக்கியுள்ளார். அதன்பின்னர் நேற்று அதிகாலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய போது, ​​சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. பின்னர் சிறுமியை Read More

Read more

வீட்டில் பரவியது தீ….. உடல் கருகி இறந்த 8 வயது சிறுமி!!

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தெரிய வருகையில், வீட்டிலுள்ள அறையொன்றில் பரவிய தீயினால், வீட்டின் கூரை உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது வீட்டிலிருந்த 8 வயதுச் சிறுமி தீக்கிரையாகியுள்ளார். தீ பரவும் சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த குறித்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டில் பரவிய தீயை வெலிகம காவல்துறையினர் மற்றும் மாத்தறை Read More

Read more