விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் – எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு

திரைப்பட இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் குறித்து இயக்குநரும் Read More

Read more

5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ

குவால்காம் நிறுவனத்தின் 5ஜி நிகழ்வு நேற்று துவங்கியது. இவ்விழாவில் குவால்காம் 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் அடுத்த தலைமுறை இணைய சேவையை வழங்குவதை சாத்தியப்படுத்தும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய குவால்காம் திட்டமிட்டு உள்ளது. இத்துடன் உலகம் முழுக்க பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் நீண்ட கால கூட்டணியை வைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை Read More

Read more

5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஐகூ யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா Read More

Read more

யாழ்.மாவட்டத்தில் தனியார் கல்விநிலையங்களுக்கு பூட்டு – எடுக்கப்பட்டது தீர்மானம்

யாழ். மாவட்டத்தில் நாளை புதன்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், Read More

Read more

‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக Read More

Read more

கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பு -திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மறைந்தார் பிரபல வீரர்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59) மும்பை தனியார் ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் டீன் ஜோன்ஸ் நேர்முக வர்ணனையாளராகவும் கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்து வந்தார். ஐபிஎல் போட்டிகள் கடந்த 19-ம் திகதி தொடங்கிய நிலையில், இதற்கான பணிகளுக்காக அவர் மும்பையில் இருந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததையடுத்து அவுஸ்ரேலியாவில் உள்ள அவரது Read More

Read more

இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவங்கியது

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம். இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆப்பிள் சாதனங்களை வாங்கிட முடியும். இத்துடன் தள்ளுபடி மற்றும் இதர நிதி சலுகைகளை வழங்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்தபடி வாங்கிட முடியும். Read More

Read more

சூர்யா-ஜோதிகா பற்றி அவதூறு… இயக்குனர் மீது ரசிகர்கள் புகார்

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவை பற்றி அவதூறு பரப்புவதாக சினிமா இயக்குனர் மீது ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வு பற்றி கருத்து தெரிவிக்கையில் நீதிமன்றம் பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டதாக புகார் எழுந்தது. சூர்யாவின் கருத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருத சென்னை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. இது பற்றிய பரபரப்பு அடங்கிய வேளையில், நேற்று அகில இந்திய தலைமை சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் சிலர் சென்னை Read More

Read more

ரஜினி எழுதிய பன்ச் வசனங்கள்… அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் பன்ச் வசனங்கள் எழுதியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் `அண்ணாத்த’. இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டன. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டது. நவம்பரில் இருந்து இதன் Read More

Read more

மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக மாகாண மட்டத்தில் நடமாடும் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மற்றும் லங்கா தனியார் மின்சார நிறுவனம் பிரைவேட் லிமிடெட் (லெகோ) ஆகியவற்றுடன் இணைந்து இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் முதற்மட்டமாக தென்மாகாணத்தில் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நடமாடும் சேவையின் அடுத்த மக்கள் சந்திப்பு வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் Read More

Read more