கொழும்பில் பாரிய தீ விபத்து! 15 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – புறக்கோட்டையில் ஆடை வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு காயமடைந்தவர்களில் 6 பேருக்கு கடும் தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர். கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். புறக்கோட்டை- 2ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடை Read More

Read more

விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்து….. தானும் தீயில் குதித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி!!

வெலிகம, கும்பல்கம குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணி ஒருவர் விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று(02/09/2023) பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணி விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 33 வயதான இந்த எகிப்திய சுற்றுலாப் பயணி சுமார் மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் ஒரு மாத காலத்துக்கான சுற்றுலா விடுதிக்கு Read More

Read more

கதவுகள் பூட்டப்பட்ட புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு விபத்து….. பேர் உடல்கருகி பலி!!

இந்தியாவின் மதுரை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IRCDC சுற்றுலா புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது. இன்று(26/08/2023) அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு தீயணைப்பு படையினர் விரைவில் வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புகையிரத பெட்டியில் 60 பேர் இருந்ததாகவும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் யாரும் வெளியே செல்ல முடியாமல் தீயில் சிக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. .

Read more

முல்லைத்தீவு – பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்….. நால்வர் கைது!!

முல்லைத்தீவு – மல்லாவி, பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த (10/07/2023)அன்று பாலிநகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். வீடொன்றினுள் நுழைந்து சரமாரி துப்பாக்கிச் சூடு – பறிபோனது 23 வயது இளைஞரின் உயிர்….. முல்லைதீவில் சம்பவம்!! – Pasanga FM இதனை தொடர்ந்து, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் Read More

Read more

வீடொன்றினுள் நுழைந்து சரமாரி துப்பாக்கிச் சூடு – பறிபோனது 23 வயது இளைஞரின் உயிர்….. முல்லைதீவில் சம்பவம்!!

முல்லைத்தீவு – மல்லாவி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம்….. உண்மையை உடைத்தெறிந்த தென்னிலங்கை ஊடகம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 30 ஆம் திகதி(30/06/2023) சென்ற குறித்த பேருந்தை, மூன்று கோடி ரூபா பெறுமதியான காப்புறுதியை பெற்றுக் கொள்வதற்காவே உரிமையாளர் திட்டமிட்டு பேருந்திற்கு தீ வைத்ததாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேருந்து தீப்பிடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில் இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள வாகனம் திருத்தும் Read More

Read more

பட்டப்பகலில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு திரவத்தை ஊற்றி உயிருடன் தீ வைத்த நபர்!!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். இளம் Read More

Read more

யாழில் தீயினால் இரு குடும்பப் பெண்கள் மரணம்!!

யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்பவர் கடந்த 08ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரிய பணியில் இருந்து Read More

Read more

நாட்டில் 48 மணி நேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!!

தெற்கின் அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும்காவல்துறையினர் தெரிவித்தனர் . கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு, சம்பவம் இதுவாகும். பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் Read More

Read more

திடீரென தீப்பற்றியெரிந்தது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றியெரிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரதநிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டிருந்தது. குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more