நீராடச்சென்றவர் சடலமாக கரையொதுங்கினார்!!

திருகோணமலை – நிலாவெளி கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) முற்பகல் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் கூறினர். கண்டி – தலாதுஓயா பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே நேற்று (16) பிற்பகல் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார். மாத்தளையிலிருந்து சுற்றுலா சென்றிருந்த சிலர், நேற்று (16) பிற்பகல் நிலாவெளி கடலில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவரை காப்பாற்ற 2 நண்பர்கள் Read More

Read more

மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது மர்ம தேசம்!!

மர்ம தேசமென அறியப்படும் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல’ என்று கூறியிருந்தார். இதனால், இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என நம்பிக்கை உருவாகியிருந்தது. இந்நிலையில், தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா இன்று Read More

Read more

17 வருடங்கள் முடிந்தும் கொஞ்சமும் குறையாத வலிகள்….. (நினைவேந்தல் புகைப்படங்கள்)!!

17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின. இந்த சுனாமியின் Read More

Read more

சாந்திரபுர கடற்கரையில் கைப்பற்றப்பட்டது 1000KG வெடிபொருட்கள்!!

மன்னாரில் 1000 கிலோ சட்ட விரோதமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  மன்னார் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மன்னார், சாந்திரபுர கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனையின் போது வோட்டர் ஜெல் (Water Gel) எனும் வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 54 மற்றும் 57 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மன்னாரில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவர்களிடம் இருந்து 998.750 கிலோ எடையுள்ள 7,990 வாட்டர் ஜெல் Read More

Read more

குறைந்த காற்றழுத்தம் விருத்தியடையும்!!

நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் Read More

Read more