ஜுன் மாதம் பேரூந்து கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும்….. தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் ஜுன் மாதம் இடம்பெறவுள்ள பேரூந்து கட்டண திருத்தத்தில் கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து  அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்தொன்றை முன்வைத்துள்ளார். மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலேயே தேசிய பேரூந்து கட்டண சூத்திரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “டொலரின் பெறுமதி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் இந்த நிலைமை Read More

Read more

23 பேருடன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது பேருந்து!!

பன்விலை ஆடை தொழிற்சாலைக்கு 20 பெண்கள் உட்பட 23 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று(20/01/2023) அதிகாலை விபத்துக்குள்ளானதாக பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மடுல்கலை ஆடை தொழிற்சாலைக்கு உனனகலை பகுதியிலிருந்து பெண்களை ஏற்றிச் சென்றபோதே குறி்த்த குடைசாய்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாரதி உட்பட எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லையென்றும், அவர்கள் அனைவரும் மடுல்கலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more

நாளை(03/07/2022) முதல் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக முடக்கம்!!

நாளை முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பொது போக்குவரத்து சேவையை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாலைகளில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் இதற்கு Read More

Read more

வரலாற்றில் முதல் தடவை உச்சம் தொட்ட பேருந்து கட்டணம்!!

முதல் தடவையாக இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் 4000 ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து கட்டணம் 4450.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. குறித்த கட்டண உயர்விற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான கட்டண அதிகரிப்பு இடம் பெறவில்லை எனவும், இதன் காரணமாக போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   அதற்கு பதிலாக டீசல் கொடுப்பனவு ஒன்றை வழங்கி கட்டணத்தை Read More

Read more

நாளை முதல் புதிய பஸ் கட்டணங்கள்….. குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபா!!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து பேருந்து கட்டணங்களும் 22 சதவீதம் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்சம் 30% கட்டண உயர்வை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

வடபிராந்தியத்தில் இ. போ. சபை பேருந்துகளும் இதுவரையில் சேவையில் ஈடுபடவில்லை!!

வடபிராந்தியத்தில் இன்று (27/06/2022) அதிகாலை வரை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சேவை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க பெட்ரோல் வழங்கப்பட வேண்டும், அது வழங்கப்படாத பட்சத்தில் இன்று(27/06/2022) முதல் பணியில் ஈடுபடப் போவதில்லையென இலங்கை போக்குவரத்துசபை வடபிராந்திய தொழிற்சங்கங்கள் நேற்று(26/06/2022) அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, யாழ் மாவட்டத்திலுள்ள இ.போ.ச ஊழியர்களிற்கு பெட்ரோல் இன்று வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். வடக்கின் ஏனைய இ.போ.ச Read More

Read more

குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாக உயர்வு !!

நாளை (27/06/2022) முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இதன்படி, 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் முமுடிவெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

600 ரூபா விலையில் தாரளமாக டீசல் கிடைக்கின்றது….. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

ஒரு லீற்றர் டீசல் வெளியில் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையில் தாரளமாக டீசல் உள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். முறையாக டீசல் வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக தடைப்படும் என்றார். இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலை எரிபொருள் வழங்கிய போதிலும் அதுவும் தற்போது வழங்கப்படுவதில்லை Read More

Read more

பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பம்….. ஆனால் மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் பிரச்சினை!!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நாளை முதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு Read More

Read more

திங்கட்கிழமை முதல் எந்தவொரு தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது….. தலைவர் கெமுனு விஜேரத்ன!!

பேருந்துகளுக்கு முறையான டீசல் கிடைக்காததால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (06/06/2022) அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், டீசல் பெறுவதற்கு பேருந்துகள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் Read More

Read more