திருகோணமலையில் தேடப்பட்ட்து யுத்த காலத்தில் விடுதலை புலிகளால் புதைக்கப்படட ஆயுதங்கள்!!
திருகோணமலை மாவட்டத்தின் – ஈச்சிலம்பற்று காவல்துறையினர் பிரிவின் விநாயகபுரம் பகுதியில் உள்ள வயல் பகுதியிலுள்ள மரமொன்றின் கீழ் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வியாழக்கிழமை (19/05/2022) மாலை மூதூர் நீதிமன்ற நீதிவானின் அனுமதியுடன் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது ஐந்தடிக்கு மேல் தோன்றியும் எந்தவிதமான ஆயுதங்களும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்தாகும்.
இதன்போது,
காவல்துறை உயர் அதிகாரிகள் ,நீதிமன்ற உத்தியோகத்தர்கள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் கலந்து கொண்டார்கள்.