ஒன்லைன் கல்விக்கு ஏற்ற ‘ஸ்மார்ட் போன்’ இல்லை – தவறான முடிவெடுத்த மாணவன் – சோகத்தில் குடும்பம்!!

ஒன்லைன் மூலம் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கு ஏற்ற ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் வாரியபொல பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வாரியபொல காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரியபொல புறநகரில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் கவிந்து தில்ஹான் கேஷரா விஜேரத்ன என்ற 10 ஆம் வகுப்பு மாணவனே கடந்த (16) ஆம் திகதி தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வாரியபொல Read More

Read more

கெளதாரி முனை கடலில் மூழ்கிய யாழ் இளைஞன்!!

பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களோடு நேற்று ஞாயிற்றுக் கிழமை கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர். இதன் போதே இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளார். கடலில் மூழ்கிய இளைஞனை நண்பர்கள் ஆபத்தான நிலையில் மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலையைச்சேர்ந்த 30வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட Read More

Read more

கொழும்பில் நடந்த துயரம் – இளம் தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

காலி – கொழும்பு வீதியில் பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் மோட்டார் சைக்கிளில் சிக்கியமையினால் அதில் பயணித்த தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் 6 வயதுடைய சிறுவன் காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – கொழும்பு பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் வீதி Read More

Read more

கொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் ஆபத்தான நிலையில் இருவர்!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான வான் ஒன்றிலேயே மோதியுள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக விபத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பத்தனை Read More

Read more

மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்ப பெண்ணெருவர் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Read more

யாழில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- கட்டுப்படுத்துவதற்கு இதுவே வழி; அரச அதிபர் விடுத்துள்ள அறிப்பு!!

கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதன் மூலம் இறப்புகளை தவிர்க்கலாம் எனயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினால்  உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.   எனவே பொதுமக்கள் கொரோனா நோய் அறிகுறி காணப்படுமிடத்து உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று நோய்க்குரிய சிகிச்சையினை பெறுமிடத்து உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் Read More

Read more

கனடாவில் அதிக வெப்பம் ; பலர் உயிரிழப்பு!!

கனடாவில் அதிக வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக Vancouver நகர பொலிஸார் தெரிவித்தனர். வயது முதிர்ந்தவர்களே பெருமளவில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடச்சியாக மூன்றாவது நாளாக நேற்று (29) 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கனடாவில் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை முன்னெப்போதும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த வெப்பநிலை காரணமாக, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Read more

அதிகாலையில் நடந்த கோரம்! ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

யாகல பகுதியில் இருந்து பேமிரிய நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3 இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோட்டார் வாகனத்தில் மூவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் வாகன ஓட்டுனர் தப்பிச் சென்றிருந்த நிலையில் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

தொடர்ந்தும் உயிரிழந்து ஒதுங்கும் கடலாமைகள்!!

எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்து கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக கடல் ஆமைகளே பெருமளவில் உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன. அந்த வகையில் களுத்துறை – வஸ்கடுவ சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்த கடலாமை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கிராம் எடைகொண்ட இந்தக் கடலாமையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர். இதேவேளை மொரட்டுவ – அங்குலான கடற்கரையில் டொல்பினை ஒத்த உயிரினம் ஒன்றின் உடற்பாகங்கள் Read More

Read more

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையில் 1,871 பேர் உயிரிழப்பு! விபரம் வெளியானது!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,871 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கொரோனா பரவல் தடுப்புச் செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. முதலாவது அலையில் 13 மரணங்களும், இரண்டாவது அலையில் 596 மரணங்களும் பதிவாகின. இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலையில் இதுவரை 1,871 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் Read More

Read more