மோட்டார் சைக்கிள் – காவல்துறையினரின் தண்ணீர் பவுசர் மோதி விபத்து….. துடிதுடித்து இறந்த கணவன் – ஆபத்தான நிலையில் மனைவி!!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று(19/08/2023) மதியம் மோட்டார் சைக்கிளும் – காவல்துறையினரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது காவல்துறையினரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புவனேஸ்வரன் மனோஜ் (வயது  31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார். மன்னாரை சேர்ந்த 26 வயது  மனைவி Read More

Read more

அரச பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து….. 18 பேர் படுகாயம்!!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01/08/2023) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. Jaffna Univercity, எதிர்திசையில் இருந்து வந்த பேருந்து ஒன்றுக்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு சறுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் Read More

Read more

யாழ் – அராலியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார்சைக்கிள்கள்….. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம்(29/06/2023) வியாழக்கிழமை மதியம் இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( 37 வயது) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (Mechanic) Read More

Read more

நான்கு பெரிய வாகனங்கள் மோதி பாரிய விபத்து….. கவலைக்கிடமாகவுள்ளது 5 பேரின் நிலைமை!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26/06/2023) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

முகமாலையில் மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளியது அரச பேருந்து….. ஒருவர் பலி – இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று(24/05/2023) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று(24/05/2023) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை Read More

Read more

பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதல்….. சம்பவ இடத்திலேயே இளைஞர் மரணம்!!

வவுனியாவில் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓமந்தை பகுதியில் இருந்து சென்ற பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தக கட்டிட தொகுதியிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் Read More

Read more

மண்டான் – குஞ்சர்கடை வீதியில் மோ.சைக்கிள் விபத்து….. ஒருவர் மரணம் – ஆபத்தான நிலையில் 17 வயது மாணவன்!!

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மண்டான், கரணவாய் மேற்கு, பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. மேலு‌ம், இவருடன் பயணித்த சிவகுமார் கலையொளி (வயது 17)  என்பவருக்கும் ஒரு கால் முடிவடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக Read More

Read more

அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

யாழி அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை உள்ளதாகவும், அதனால், அப்பகுதியில் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் Read More

Read more

மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து….. ஐவர் மாயம்!!

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் இழுவை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானநிலையில் படகோட்டி உட்பட ஐவர் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. “சஸ்மி துவா 02” என்ற இழுவைப்படகே ஆழ்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கவிழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி திருகோணமலையில் இருந்து குறித்த படகு புறப்பட்டு சென்றுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடுமாறு கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் Read More

Read more

வான் ஒன்றுடன் மோதியது பாரவூர்தி….. சிறுவன் மரணம் – 07பேர் படுகாயம்!!

திருகோணமலை – புத்தளம் வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (19/04/2022) திருகோணமலையில் இருந்து ஹொரவ்பத்தானை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வானில் பயணித்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் திருகோணமலை மற்றும் மகாதிவுல்வெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read more