News

மீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ் மாத இறுதியில் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால் விமான நிலையத்தினை திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் மேலதிக செயலார் Read More

தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17 ஆம் திகதி வரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 17 ஆம் திகதிக்கு பின்னர் இன்றைய தினம் வரை கிடைத்த விண்ணப்பங்களுக்காக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரின் கையெழுத்துடன் தற்காலிக அடையாள பத்திரம் வழங்கப்படும் என ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான 30 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இவற்றுக்காக தற்காலிக அடையாள பத்திரங்ள் தயாரிக்கும் பணிகள் தற்போது Read More

கீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம்! தமிழர்கள் போராடியது இதற்கு தானே!

கீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ கால் மூலம் நேற்று நடத்தி வைத்தார். தற்பொழுது அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்றுவருகிறது. மேலும் 6ம் கட்ட அகழாய்வில் பல நம்பமுடியாத அரிய பொருட்கள் கிடைத்துள்ளது, அதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். கீழடியில் தற்பொழுது 6ம் கட்ட அகழாய்வு பணிகள் ஊரடங்கிற்குப் பின் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை Read More

பிரிட்டன் மக்களுக்காக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எடுத்துள்ள நடவடிக்கை

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், தற்போது உடல் பருமனுக்கு எதிரான போருக்காகத் தனது நாட்டு மக்களைத் தயார் செய்துவருகிறார். உடல் பருமனுக்குக் காரணமான உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியை ஊக்குவிப்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்துவருகிறார். கடந்த மார்ச் 27-ம் திகதி பொரிஸ் ஜோன்ஸனுக்குக் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அபாரமான தன்னம்பிக்கையாலும் மருத்துவர்களின் விடாமுயற்சியாலும், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு ஏப்ரல் 12-ல் வீடு திரும்பினார். Read More

சீனாவை சுற்றி வட்டமிடும் அமெரிக்கப் போர் விமானங்கள்! அமெரிக்கா வகுக்கும் பரபரப்பு வியூகம்?

சீனாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் தூதரகங்களை மூடியதன் பிறகு போர்ப்பதற்றம் அதிகரித்துச் செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம், அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது, சீன தூதரக அமெரிக்காவைச் சுற்றியுள்ள தூதரக வசதிகளைப் பயன்படுத்தி சீன உளவு முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் இராஜதந்திரம் மற்றும் தென் சீனக் கடல் வரையிலான தொடர்ச்சியான மோதல்களில் அண்மையில் தூதரக மூடல் மோதல்களும் Read More

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய மருத்துவர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது எனவும் இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 31ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற Read More

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று காலை தலைமன்னார் கடற்கரை பகுதியில் கடற்படையினர் றோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடற்கரையில் சடலத்தை அவதானித்துள்ளனர். கடற்படையினர் உடனடியாக தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரனைகளை முன்னெடுத்ததோடு, மன்னார் Read More

வடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கூறுபவர்கள் யாருக்காக செய்தோம் என்பதை கூறுவார்களா என தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ச அரவிந்தன் தெரிவித்தார்

வடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கடந்தகால அரசாங்கமும் அதில் இருந்தவர்களும் கூறிவருகின்றனர் ஆனால் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை தமிழ் மக்கள் பயன்படுத்தக் கூடியதாக உள்ளதை யாராவது சிந்தித்தார்களா என்பதே இன்றைய கேள்வி குறிப்பாக மயிலிட்டி துறைமுகம்  அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது அனால் எங்கள் கடற்தொழிலாளர் பயன்படுத்துகிறார்களா  என்றால் இல்லை ஆனால் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்பதே வெளிப்பாடு நமது கடற்தொழிலாளர் பயன்படுத்த முடியாதசூழலே உள்ளது நாம் அப்பகுதி மக்களை சந்திக்கின்ற போது இந்த குறைபாட்டை கூறுகிறார்கள் இவ்வாறே Read More

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில்

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில்    23.07.2020  இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில்கட்சியின்துணைத்தலைவர் ச. அரவிந்தன் (1) மற்றும் வேட்பாளர்களாகிய ம. மயூரன்(7) வி. ஐங்கரன்(8) ஆகியோர் கலந்து கொண்டு. மக்களுடன் கலந்து உரையாடினார்கள்.  மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தது மாத்திரம் அன்றி முழு ஆதரவையும் வழங்கினார்கள்.  

கொரோனா நோயாளர்களின் தொகை சற்றுமுன் அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2768ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நால்வரும் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்குள்ளாகி 654 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தொற்றிலிருந்து 2103 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.