கல்லடி பாலத்திற்கு கீழ் சடலமாக மீட்கப்பட்டார் 22 வயது யுவதி!!

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(31/05/2023) மாலை இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

படகு கவிழ்ந்ததில் காணாமல்போன கடல் தொழிலாளர்கள்….. தீவிரமாக தேடல் நடவடிக்கைகள்!!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீன்பிடிச்சென்ற ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் இருவர் உயிர்தப்பியுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்ற போதும் நேற்று(30/01/2023) இரவு மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிச்சென்றவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது. நேற்றைய தினம்(30/01/2023) மீன்பிடி திணைக்களத்தினால் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் குறித்த கடற்றொழிலாளர்கள் குடும்ப வறுமை காரணமாக மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், கடல் கொந்தழிப்பு காரணமாக படகு கவிழ்ந்துள்ள நிலையில் இருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளதுடன் ஒருவர் Read More

Read more

மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம் (புகைப்படங்கள்)!!

மட்டக்களப்பு கதிரவெளியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். நேற்று காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதுடைய ஜீவானந்தம் நிமால்ராஜ், 23 வயதுடைய புலேந்திரன் அனுஜன்மற்றும் 25 வயதுடைய தங்கவேல் தகிசன் போன்ற இளைஞர்களே இவ்வாறு கடலில் மூழ்கி மரணமடைந்திருந்தார்கள். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

இளம் யுவதிகள் இருவர் கைது!!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது 31 வயதுடைய பெண் ஒருவர் 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, குறித்த பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த Read More

Read more

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

3 வயது சிறுமியின் உயிரை பறித்தது தண்ணீர் பீப்பா!!

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடியில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றினுள் 3வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த வேளை தண்ணீர் குழாய் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அதன் போது அங்கு இருந்த சிறிய பிளாஸ்டிக் பீப்பாயில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டுள்ளார். பின்னர் அந்த பழத்தை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்த வேளை சிறுமி தலைகீழாக பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்துள்ளார். 23 அங்குலம் உயரம் கொண்ட அந்த சிறியரக Read More

Read more

தொழிலுக்கு சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக கரையொதுங்கல் (படங்கள்)!!

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் இருவரது சடலங்களும் காயன்கேணி கடல் பரப்பில் இருந்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. கண்ணகி அம்மன் கோவில் வீதி காயான்கேணியைச் சேர்ந்த மு.திசநாயகம்(வயது 56) என்ற தந்தையும் அகிலவாசன் (21 வயது) மகனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை வழக்கம் போல் Read More

Read more

17 வருடங்கள் முடிந்தும் கொஞ்சமும் குறையாத வலிகள்….. (நினைவேந்தல் புகைப்படங்கள்)!!

17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின. இந்த சுனாமியின் Read More

Read more

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3-4 லட்சத்திற்குஅதிகமாக அதிகமாக வருமானம் பெறும் மீனவர்கள்!!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை, வளை மற்றும் சுறா மீன்கள் போன்றன கரைவலைகள் மூலம் பிடிக்கப்படுவதாகவும்  அதனைப் பல இலட்சம் ரூபாவரை வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு இன்றைய தினம்  சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. Read More

Read more

மட்டக்களப்பில் நகைக்காக வர்த்தகரின் மனைவி கொடூரமாக கொலை!!

மட்டக்களப்பு – அரசடி பகுதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று முன்தினம்(21) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். அரசடியிலுள்ள வர்த்தகரின் வீட்டிற்கு வழமையாக வேலை செய்யும் தந்தையும் மகளுமே வர்த்தகரின் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். வீட்டிலுள்ள நகைகளைக் கொள்ளையிடுவதற்காக சந்தேகநபர்கள் இந்த குற்றச்செயலை செய்துள்ளனர். கொலை Read More

Read more