கல்லடி பாலத்திற்கு கீழ் சடலமாக மீட்கப்பட்டார் 22 வயது யுவதி!!

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(31/05/2023) மாலை இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

மட்டக்க்ளப்பில் பூசாரி வேடத்தில் வீடுகளிற்கு சென்று கொள்ளையில் ஈடுபட்ட 31 வயது பெண் கைது!!

மட்டக்களப்பு பகுதியில்  பூசாரி வேடத்தில் வந்த பெண் ஒருவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிகார பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் சந்தேக நபர் பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் Read More

Read more

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்….. ஸ்தலத்திலே பலியானார் குடும்பஸ்தர்!!

மட்டக்களப்பு சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று செவ்வாய் கிழமை இரவு 7மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் எதிரே வந்த கன்ரர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 4 பிள்ளைகளின் தந்தையான கறுவாக்கேணியைச் சேர்ந்த து.விஜயநாதன் வயது 51 என்பவரே உயிரிழந்துள்ளார் Read More

Read more

மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு, கோடா பரல்கள் போன்றவையும் மீட்கப்பட்டதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோணர தெரிவித்தார். ஆயித்தியமலை கற்பானைக் குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டபோது புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவளைப்பில் மூன்று பரல் கோடா, 25 லீற்றர் கசிப்பு மற்றும் Read More

Read more

அதிகாலையில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அனர்த்தம்!!

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(13) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டத்தில் உள்ள தனது செங்கல் தொழில் செய்யும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் என்பவர் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் எழுந்து வெளியில் வந்தபோது திடீரென வந்த Read More

Read more

07 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்!!

இரண்டு மாவட்டங்களின் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (08) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழுள்ள 05 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தின் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

Read more

தலைக்கவச பிரச்சினையால் பெண் ஒருவர் அடித்து கொலை!!!!

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதுடன், பெண் மீது தாக்குதல் நடாத்தியவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலை உன்னிச்சை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்களான இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு Read More

Read more

மட்டக்களப்பில் கடுமையான சட்ட நடவடிக்கை- முதல்வர் தீர்மானம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். இதன்போது கொரனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக நாடு படுமோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாநகரை அதிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. சுகாதார நடைமுறைகளை கடுமையாக்கவும் அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளைப் பேணாத வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. கிராம Read More

Read more