தொடருந்து விபத்தில் பெண் பலி: தமிழர் பகுதியில் சம்பவம்
வவுனியா (Vavuniya) – ஓமந்தை (Omanthai) பகுதியில் பெண் ஒருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை (10) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழிலிருந்து (Jaffna) – வவுனியா (Vavuniya) நோக்கி பயணித்த தொடருந்து புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தொடருந்து பாதையில் நடந்து சென்ற பெண்ணுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் Read More
Read more