நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம்… வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்….. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு!!

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை “நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம். வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு மரபுவழியான தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடுகள் மீதான புற வல்லாதிக்கத்தை நாம் பலதசாப்தங்களாக அனுபவித்து, வந்திருக்கின்றோம். இந்த நிலையில் உலக ஒழுங்கியலுக்கு ஏற்றவாறான, நியாயமான எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பல்வேறு தளங்களில், வடிவங்களில் முன்னகர்த்தி ஈழத் தமிழர்களாகிய நாம் இன்றுவரை போராடிய வண்ணம் Read More

Read more

பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர் யாழ் போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதன்படி, இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன் தேசிய மருந்து தட்டுப்பாடு அபாய நிலை காரணமாக சத்திர சிகிச்சை கூட செயற்பாடுகளை பாரிய அளவில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும், அவசர நரம்பியல் சத்திர சிகிச்சைகளும் Read More

Read more

யாழில் விளையாட்டில் மற்றுமொரு குடும்பஸ்தர் உயிரும் பறிபோனது!!

அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வந்துடைய குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் அலைபேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு உயிரை மாய்த்துள்ளனர். “நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கிலிட்டு சடலமாக காணப்பட்டார். எப்போதும் பப்ஜி Read More

Read more

அரியாலையில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு….. அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைப்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா வயது 42 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் அப்பகுதியில் உள்ளவர்கள் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி காணாமல் போயிருந்தார். காணாமல் போனமை தொடர்பில் உறவினர்களால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், காவல்துறையினருக்கு நேற்றைய Read More

Read more

யாழ் – புத்தூர் பகுதியில் கணவன், மனைவி இருவரும் பரிதாபகரமாக பலி!!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று மதியம் வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியில் நீராடிய போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் சென்ற நிலையில் Read More

Read more

விக்னேஸ்வரா கல்லூரி வீதி நீர் வடிகால் சம்பந்தமான கூட்டம் இன்று!!

நாளைய தினம் நடைபெறவுள்ள கரவெட்டி விக்னேஸ்வரா வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியை நீர் வடிகால் செய்யாமல் புனரமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. நீர் வடிகால் செய்யாமல் வீதி அபிவிருத்தி நடைபெற்றால் நெல்லியடி பிரதான வீதியால் வரும் வெள்ளம் முதல் அனைத்து வெள்ள நீரும் கரவெட்டி இராஜ கிராமம் மற்றும் மத்தொணி கிராமங்கள் உட்பட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகும் Read More

Read more

எதிர்வரும் வாரம் முதல் வடக்கின் பலபகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனகனமழை வரை கிடைக்கும் வாய்ப்பு….. மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பின்னர் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா ( Nagamuthu Pradeeparaja) எதிர்வு கூறியுள்ளார். இதன் காரணமாக, எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 03.03.2022 வியாழக்கிழமை, 04.03.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 05.03.2022 சனிக்கிழமை ஆகிய நாட்களில் வடக்கு Read More

Read more

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது….. விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Pradeeparaja) தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால், இன்று (20) முதல் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். நெல், வெங்காயம், உழுந்து ஆகிய பயிர்களின் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இதனை Read More

Read more

“அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்”….. போராட்ட களத்தில் உயிரிழந்த மீனவர்களின் ஆத்மா கருத்து!!

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன் “அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்” என ஒருவர் கோரிக்கை விடுத்து மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் ஐந்தாவது நாளாக நேற்றைய தினமும் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கருப்பு உடை தரித்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து Read More

Read more