மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து….. ஐவர் மாயம்!!

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் இழுவை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானநிலையில் படகோட்டி உட்பட ஐவர் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. “சஸ்மி துவா 02” என்ற இழுவைப்படகே ஆழ்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கவிழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி திருகோணமலையில் இருந்து குறித்த படகு புறப்பட்டு சென்றுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடுமாறு கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் Read More

Read more

இ.போ.ச பேருந்துடன் மோதியது கனரக வாகனம்….. ஆறு பேர் அவசர சிகிச்சையில்!!

திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வாகன விபத்தொன்று இன்று (25/05/2022) இடம் பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ளனர். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் களனியை நோக்கி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுவாமிமலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் Read More

Read more

வான் ஒன்றுடன் மோதியது பாரவூர்தி….. சிறுவன் மரணம் – 07பேர் படுகாயம்!!

திருகோணமலை – புத்தளம் வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (19/04/2022) திருகோணமலையில் இருந்து ஹொரவ்பத்தானை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வானில் பயணித்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் திருகோணமலை மற்றும் மகாதிவுல்வெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read more

பயணிகள் பேரூந்து – டிப்பர் மோதல்….. 26 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் (படங்கள்)!!

திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேரூந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளான போதே இந்த 26 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில், வாகனங்கள் இரண்டினதும் சாரதிகளும் அடங்குகின்றனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Read more

திருகோணாலையில் கோரவிபத்து….. ஸ்தலத்திலேயே ஒரு உயிர் பலி!!

திருகோணமலையில் பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் ,திருகோணமலையை நோக்கி மண்கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதியே இவ்வாறு ஸ்தளத்தில் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More

Read more

கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து….. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, தம்பலகாமம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன் வான் ஒன்று மோதியதில், இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான, எம்.எஸ்.எம்.கரீம் ( வயது – 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாரதியின் அருகாமையில் இருந்தவரே உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read more