கெளதாரி முனை கடலில் மூழ்கிய யாழ் இளைஞன்!!

பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களோடு நேற்று ஞாயிற்றுக் கிழமை கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர். இதன் போதே இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளார். கடலில் மூழ்கிய இளைஞனை நண்பர்கள் ஆபத்தான நிலையில் மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலையைச்சேர்ந்த 30வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட Read More

Read more

வெடிக்காத நிலையில் செல்கள் மீட்பு!!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை மீட்கப்பட்டுள்ளது. குறித்த செல்களை நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Read more

பருத்தித்துறையில் மாயமான 70 பேர்- சமூகத்திற்கு ஏற்படவுள்ள பாரிய ஆபத்து!!

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். பருத்தித்துறை நகரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 6 வர்த்தகர்களும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு Read More

Read more

யாழ் நெல்லியடியில் குளிர்பானத்தால் சிக்கிய திருடனின் பகீர் வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி, நெல்லியடி நகரில் உள்ள மருந்தகத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞன், வேறு திருட்டுக்களிலும் ஈடுபட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. போதைக்கு அடிமையான குறித்த இளைஞன், பணத்தேவைக்காக திருடியதாக கூறியுள்ளான். கடந்த 4ஆம் திகதி நெல்லியடி நகரிலுள்ள மருந்தகம் ஒன்றை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சிசிரிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருந்தன. அதோடு வர்த்தக நிலையத்திற்குள் குளிர்பானத்தை கண்டதும், முக மறைப்பை அகற்றி, குளிர்பானத்தை அருந்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் Read More

Read more

கருத்து முரண்பாட்டால் தமையனின் காதை கடித்த தம்பி- மண்டையை பதம்பார்த்த அண்ணன்!!

தென்மராட்சி-நாவற்குழிப் பகுதியில் அண்ணன், தம்பி இடையே இடம்பெற்ற மோதலில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குழிப் பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் அண்ணனின் காதை தம்பியார் கடித்து காயப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அண்ணன் அருகில் இருந்த தராசினை தூக்கி தம்பியின் தலையில் தாக்கியுள்ளார். தலை மற்றும் காதுப் பகுதியில் படுகாயமடைந்த 32 மற்றும் 37 வயதான சகோதரர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். Read More

Read more

கள்ளு விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

வடமாகாணம் முழுவதும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கள்ளு தவறணை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்துள்ளார். இன்று பனை அபிவிருத்தி சபை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கொரோனாநிலைமை காரணமாக சகல கள்ளு தவறனைகளும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக கள்ளு விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது.  தற்போது மதுவரித் திணைக்களத்தினால் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கள்ளினை போத்தலில் அடைத்து விற்பனை Read More

Read more

கோப்பாயில் தாக்குதலில் 7 பேர் காயம்; விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமனம்!!

யாழ்ப்பாணம் – கோப்பாய், செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் 7 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 05 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 14 பேரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தங்கியிருந்த கட்டடம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Read More

Read more

யாழ் இந்துக் கல்லூரி மாணவனின் மகத்தான சாதனை!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் வட்ஸ் அப் (whatsapp) மற்றும் வைபர்(viber) ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வர வேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் Read More

Read more

கரவெட்டியில் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார் நாமல்!!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் இயந்திரவியல்சார் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தை இன்று திறந்து வைத்தார். ஒன்பது மாகாணங்களில் அரசின் தேசிய கொள்கையின் பிரகாரம் கழிவுப்பொருட்களை சேதனப் பசளையாக்கும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக யாழ். வடமராட்சியின் கரவெட்டி பிரதேச சபையின் முள்ளி பகுதியில் இன்று அமைச்சரினால் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண ஆளுநர், யாழ். அரசாங்க அதிபர் Read More

Read more

முல்லையில் குண்டு வெடிப்பு சம்பவம்- விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட மேலுமொரு அபாயகர பொருள்!!

முல்லைத்தீவு சுவாமி தோட்டப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டிய போது குண்டு வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லதைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை சுவாமி தோட்டம் தென்னந்தோட்டப் பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போதே குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு Read More

Read more