நெருக்கடி நிலை உருவாகும்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களை விட அதிகமானவர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில், நாட்டு மக்களை Read More

Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்ட 20 ரயில் சேவைகள்!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் இரவு அஞ்சல் ரயில் உட்பட 20 ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டினை மோசமான நிலைக்கு கொண்டு செல்லமால் மக்களைப் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் குறைந்தது ஒருவார காலமாவது நாட்டை முடக்க வேண்டும் என Read More

Read more

எல்லைமீறிச் செல்லும் கொரோனா! மாகாணங்களுகிடையில் பயணக்கட்டுப்பாடு

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தக் கொண்டே செல்கின்றமையினால் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read more

யாழ். தென்மராட்சியில் சில பகுதிகள் முடக்கம்

யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படவுள்ளது. அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் Read More

Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று – அமைச்சரவை அளித்த அனுமதி

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளொன்றுக்கான பி சி ஆர் பரிசோதனை யை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளர்களின் கட்டில்களின் எண்ணிக்கையை 3000 ஆக அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளளது. நாளொன்றுக்கு பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “நாங்கள் தற்போது ஒரு நாளைக்கு 20,000 சோதனைகள் செய்கிறோம். மேலும் Read More

Read more

மீண்டும் மூடப்படுகிறது பாடசாலைகள் – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் தொடர்ந்தும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் ஜி. எல் பீரிஸ் இதனை அறிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க பெரும்பாலான நாளாந்த செயற்பாடுகள் மே 7ஆம் திகதி வரை நிறுத்தப்படுகின்ற நிலையிலேயே பாடசாலைகளும் மே 7ஆம் திகதி வரை மூடப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த வாரத்தில் பாடசாலைகள் கட்டம் கட்டமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more

இந்திய மீனவர்களுடனான தொடர்பு – வடக்கு மீனவர்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மீனவர்களிடம் மீன்பிடி திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றின் ​வேகம் அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மீன்பிடி​ திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளதாவது, இந்திய மீனவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பொருள்கள் பரிமாறுதல் போன்ற எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டாம். இந்தியாவிலிருந்து மஞ்சள் மற்றும் சட்டவிரோத பொருள்களைக் கொண்டு வருவதையும் தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் Read More

Read more

நாட்டை முழுமையாக முடக்கத் திட்டமா? பாதுகாப்பு செயலர் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார். ஆனால், கொரோனாத் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் முடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் நாடு வீழ்ந்து விடும். Read More

Read more

அரச உத்தியோகத்தர்களுக்கான பணிநாட்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளிவந்தது

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அரச அலுவலகங்களிலும் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு வாரமொன்றுக்கு இரண்டு வேலை நாட்கள் விடுமுறை வழங்க முடியும் எனவும், மாதமொன்றுக்கு அதிக பட்சமாக எட்டு வேலை நாட்கள் விடுமுறை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த விடுமுறைகள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட Read More

Read more

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை!

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை நாங்கள் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் நாங்கள் நல்ல ஒரு இணக்கப்பாடுடன் வாழ்வது முக்கியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் இரண்டாவது வருட நினைவு இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாஸ்கா Read More

Read more