வடமாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்…. வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன்!!

வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் A.கேதீஸ்வரன் தெரிவித்தார். எனவே , இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதமானவர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியையும் 62 சதவீதமானவர்கள் 2 ஆம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். எந்தவொரு தடுப்பூசி மருந்தையும் பெற்றுக்கொள்ளாதவர்களே வட Read More

Read more

கிளிநொச்சி சிவநகர் கிராமத்திலிருந்து இலங்கை தேசிய கபடி குழாத்துக்குள் தெரிவான 03 வீராங்கனைகள்!!

வாய்ப்புகள் கிடைத்தால் திறமையை நிரூபிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பலரும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.. கிளிநொச்சியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய சிவநகர் கிராமத்திலிருந்து இலங்கை தேசிய கபடி குழாத்துக்கு 03 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். பாஸ்கரநாதன் டனுஷா, விஜயகுமார் நிதுஷா, இதயரஞ்சன் தேனுஜா ஆகியோரே அந்த மூன்று வீராங்கனைகளாவர். இந்த மூவருமே சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்ப கல்வியைப் பயின்றவர்கள் என்பதுடன் தற்போது உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக அணிக்காக விளையாடும் Read More

Read more

கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற வடக்கு மாகாணத்தவர்கள் கைது!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் Read More

Read more

விறகுவெட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் Read More

Read more

கெளதாரி முனை கடலில் மூழ்கிய யாழ் இளைஞன்!!

பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களோடு நேற்று ஞாயிற்றுக் கிழமை கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர். இதன் போதே இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளார். கடலில் மூழ்கிய இளைஞனை நண்பர்கள் ஆபத்தான நிலையில் மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலையைச்சேர்ந்த 30வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட Read More

Read more

கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி ஏற்றிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஒவ்வாமை!!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அதிகளவானவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதுவரை வடக்கில் ஏற்றப்பட்டு ஒவ்வாமை என அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.

Read more

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளியில் வெடிப்புச் சம்பவம்!!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட ஆட்டி வெட்டை எனும் பகுதியில் இன்று வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று மாலை 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. ஆட்டி வெட்டையின் பின் காணியில் காணி துப்பரவு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளை குப்பைக்கு தீ வைத்த போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read more