திடீரென உள்வாங்கப்பட்ட கடல் நீர்….. சுனாமி அச்சத்தில் மன்னார் மீனவர்கள்!!

மன்னார்நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இன்று(22/05/2024) அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில்,

வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கியதோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்து உள்ளன என நேரில் பார்த்தவர்கள் கூறியதாக பிரபல தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறியினும்,

படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டமையினால் வங்காலை கடற்றொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில்,

வங்காலை பங்குத்தந்தை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ( Selvam Adaikalanathan) ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலமையை பார்வையிட்டதோடு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *