யாழ் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்றைய தினம்(06/07/2022) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது கடலில் சடலமொன்று மிதப்பதைக் கண்டுள்ளனர். அதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. இதனையடுத்து, தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் சடலத்தை பார்வையிட்டுள்ளார். இந்நிலையில், முதியவர் தீவகப் பகுதியைச் சேர்ந்த யாசகம் பெறுபவராக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளார். Read More

Read more

நீராடச்சென்றவர் சடலமாக கரையொதுங்கினார்!!

திருகோணமலை – நிலாவெளி கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) முற்பகல் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் கூறினர். கண்டி – தலாதுஓயா பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே நேற்று (16) பிற்பகல் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார். மாத்தளையிலிருந்து சுற்றுலா சென்றிருந்த சிலர், நேற்று (16) பிற்பகல் நிலாவெளி கடலில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவரை காப்பாற்ற 2 நண்பர்கள் Read More

Read more

தைப்பொங்கல் தினத்தில் கடலில் அள்ளுண்ட மாணவர்கள்!! மீட்பு பணிகள் தீவிரம்

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். பிரதான வீதி கிரானைச் சேர்ந்த ஜீ. சுஜானந்தன் (வயது -16) என்பவரும், பாடசாலை வீதி கிரானைச் சேர்ந்த ச.அக்சயன் (வயது – 16) என்பவருமே கடல் அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர். இன்று தைப்பொங்கல் தினமானதால் கிரான் தேசிய பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் 07 மாணவர்கள் நண்பகல் வேளை அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்று குளித்துள்ளனர். இன்று வழமைக்கு Read More

Read more

யாழ்ப்பாண கடற்பரப்பில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மனித உடல்கள்!!

நேற்று காலை வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இரு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதே போல், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் குறித்த பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், Read More

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை!!

மத்திய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் நாளையும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய Read More

Read more