பேரூந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து…… வவுனியாவில் சம்பவம்!!

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக் குறித்து மேலும் தெரிய வருகையில், வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த இராணுவ பேரூந்து ஒன்று கொக்குவெளி இராணுவ முகாமிற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா Read More

Read more

உடுப்பிட்டியில் இரு பகுதியினருக்கிடையே மோதல்…. குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!!

யாழ். உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது. இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரில் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தில் Read More

Read more

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு….. சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக வழக்குத் தாக்கல்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணிக்கப்பட்டது. அத்துடன், Read More

Read more

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுங்கள்…. கோத்தபாய ராஜபக்ச!!

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அவசரகால விதிமுறைகளின் கீழ், அவ்வாறு கைப்பற்றியவற்றை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு எழுப்பப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்ட ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை Read More

Read more

நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் – முப்படையினரும் தயார் நிலையில்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இதன்போது ஏதேனுமொரு வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள இந்த Read More

Read more

விறகுவெட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் Read More

Read more

வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியை மடக்கிய படையினர்!!

அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் Read More

Read more

நாட்டில் குறைந்து செல்லும் தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி பெவளியிட்ட தகவல்!!

நாட்டில் மேலும் 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று இதுவரை 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 253,024 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read more

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறது! ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தல்!!

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு வழமைபோன்று அமுலில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, 23ஆம் திகதி இரவு பத்து மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடானது 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மக்கள் ஒன்று கூடுதல் நிகழ்வுகளை நடத்துதல், விருந்துபசாரங்களை நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள Read More

Read more

இன்னமும் தீர்மானிக்கவில்லை! தேவை ஏற்பட்டால் பயணத்தடை வரும்!!!!

எதிர்வரும் 14ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ஏழாம் திகதி தளர்த்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Read more