மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு, கோடா பரல்கள் போன்றவையும் மீட்கப்பட்டதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோணர தெரிவித்தார். ஆயித்தியமலை கற்பானைக் குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டபோது புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவளைப்பில் மூன்று பரல் கோடா, 25 லீற்றர் கசிப்பு மற்றும் Read More

Read more

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுங்கள்…. கோத்தபாய ராஜபக்ச!!

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அவசரகால விதிமுறைகளின் கீழ், அவ்வாறு கைப்பற்றியவற்றை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு எழுப்பப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்ட ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை Read More

Read more

ஊரடங்குச் நேரத்தில் கைப்பற்றப்பட்ட 70, 000 ஆயிரம் மில்லி வீற்றர் கசிப்பு!!

ஊரடங்குச் சட்ட நேரத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மட்டக்களப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த 70, 000 ஆயிரம் மில்லி வீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் இரு தோணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என  மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையவ இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனை வாவி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் Read More

Read more

மின்சார வேலியில் சிக்கிய யானை உயிரிழப்பு!!

தனமல்வில பகுதியில் மின்சார வேலியில் சிக்கி யானையொன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில பொலிஸ் பிரிவில் கவவெல்கல பாதுகாக்கப்பட்ட வலயத்துக்குள் காணப்படும் வாவி ஒன்றுக்கருகில் இந்த யானைகுட்டி இறந்து கிடந்துள்ளது. இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய 18 வயது யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய கல்கொட்டுகந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸார் இணைந்து நடத்திய விசாரணைகளின் போதே இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட Read More

Read more

தென்னிலங்கையில் சிக்கிய பெருமாளவான ஹெரோயின் போதைப்பொருள்!!

தென் மாகாணத்தை அண்மித்த கடற்பரப்பில், 290 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருளுடன், 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுள்ளனர். படகொன்றில் கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய, கடற்படையுடன் இணைந்து பொலிஸ் போதைப்பொருள் பிரிவு நடத்திய சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர். இதன் போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 2321 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் Read More

Read more

2.2 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் , 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஐஸின் (பளிங்கு மெதம்பேட்டமின்) பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது என்று Read More

Read more

என்னை கைது செய்ய முடியாது – போலீசுக்கு சவால் விடும் மீரா மிதுன்!!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுன் மீது இந்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த Read More

Read more

கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற வடக்கு மாகாணத்தவர்கள் கைது!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் Read More

Read more

கட்டாயமாக இனிமேல் வரதட்சணை வாங்க முடியாது! அரசாங்கம் கடுமையான உத்தரவு!!

அரச ஊழியர்கள் இனி கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது என இந்திய கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்யும் சம்பவம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பெண்கள் Read More

Read more

சட்டவிரோத வியாபார நிலையங்கள் அகற்றல்- கிராமசேவகர் மீது தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றய தினம் மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது. வவுனியா தாண்டிக்குளம் எ9 வீதியின் கரையில் அரசுக்கு சொந்தமான காணியில் சில நபர்கள் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும் அமைத்திருந்தனர். குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கடந்த 9 ஆம் திகதி அப்பகுதிக்குச்சென்ற வவுனியா பிரதேசசெயலாளர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபாரநிலையங்களை அகற்றியிருந்தார். அந்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி தாண்டிக்குளம் பிரிவு Read More

Read more