கோண்டாவில் வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் மூவர் கைது!!

யாழ். கோண்டாவில் – செல்வபுரம் பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (04) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. மானிப்பாய், கொக்குவில், கோண்டாவில் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட கூரான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். கோண்டாவில் – செல்வபுரம் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் 09 பேர் காயமடைந்தனர். மோட்டார்சைக்கிள்களில் Read More

Read more

மடக்கிப்பிடிக்கப்பட்ட பஸ்! சாரதி மற்றும் நடத்துனர் கைது!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பேருந்தில் பயணித்த 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கிரேன்பாஸில் வைத்து குறித்த பேருந்து இவ்வாறு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more

யாழில் மற்றுமொரு திருமண நிகழ்வில் பங்குபற்றியோர் தனிமைப்படுத்தலில்!!

குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்  தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் நடைபெற்ற திருமண நிகழ்விலேயே அனுமதிக்கு மேலதிகமாக பலர் கூடியுள்ளனர். இன்று குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்துள்ளனர். அதனையடத்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் Read More

Read more

இந்தியாவிலிருந்து யாழிற்கு சட்ட விரோதமாக வந்த நபர்கள்!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருகை தந்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வந்து தங்கியிருந்த நால்வர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தலுக்கு அமைய தனியான இடத்தில் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.  தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் அரச்சலூர் முகாமில் வசித்து வந்த தாய், மகள், 2 பேரப்பிள்ளைகள் என 4 பேர் படகு மூலம் தாயகம் வந்து சேர்ந்துள்ளனர். (அ.அ.எண் Read More

Read more

இலங்கையில் நேற்று அதிகளவானவர்கள் கைது! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களில் அதிகமானோர் நேற்றையதினமே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் நேற்யைதினம் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க Read More

Read more