இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

வெடித்துச் சிதறி முற்றாக பற்றி எரிந்த வீடு!!

புத்தளம் – கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் சிறிய சில்லறைக் கடையுடன் கொண்ட வீடொன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது பேரப்பிள்ளைக்கு Read More

Read more

நல்லூர், அம்பாறை, புத்தளம் ஆகிய பகுதிகளில் இன்று இதுவரையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார். இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை Read More

Read more

புத்தளத்தில் எரிவாயு ஆலையில் வெடி விபத்து….. ஆபத்தான நிலையில் இருவர்!!

புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்து நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 வயது மற்றும் 24 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது  வைத்தியசாலையில்  ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோட்டார் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளைப் புதுப்பிக்கும் இடத்தில் Read More

Read more

கல்வில பூங்காவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை உயிரிழப்பு!!

புத்தளம் – கருவலகஸ்வெவ, கல்வில பூங்காவில் காயங்களுக்குள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று  தாக கருவலகஸ்வெவ வனஜீராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டு யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதிக்குச் சென்று யானையை பார்வையிட்டுள்ளனர். இதன்போது, நிகாவெரிட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு யானைக்கு 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி குறித்த யானை உயிரிழந்துள்ளது. Read More

Read more

கல்லடி பகுதியில் பாலத்திற்குள் பாய்ந்த லொறி!!

புத்தளம் கல்லடி பகுதியில் லொறியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை  அதிகாலை பாலம் ஒன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என புத்தளம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். புத்தளத்திலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு கம்பளையிலிருந்து சென்ற 20, 22, 25 வயதுடைய இளைஞர்கள் ஏழு பேர் இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஏழு பேரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். இதன்போது, குறித்த லொறியை செலுத்திச் சென்ற சாரதி மற்றும் ஒருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் Read More

Read more

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!!

புத்தளம் – உடப்பு, பாரிப்பாடு கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று (1) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்துள்ள பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more