இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை!

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகையை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (BNA) தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் நுழைவை பஹ்ரைன் மே 24ஆம் திகதி முதல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது. பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த இடை நிறுத்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு Read More

Read more

மீண்டும் நீடிக்கப்பட்டது பயணத்தடை! இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல்

மீண்டும் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இந்தப் பயணத் தடை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், நாட்டை இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்குமாறு சுகாதாரப் பிரிவினர் ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர். இந்நிலையிலேயே மீண்டும் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொது மக்கள் Read More

Read more

பயணத்தடையில் மாற்றம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தளர்த்தப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இடைவௌி அற்ற பயணத்தடையை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதனால் எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் வீட்டுக்கு ஒருவர் மாத்திரமே வௌியில் செல்ல முடியும் எனவும் Read More

Read more

யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டது தனிமைப்படுத்தல் உத்தரவு

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்… பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு மட்டக்களப்பு… கல்மடு கிராம சேவகர் பிரிவு மொனராகலை… செவனகல கிராம சேவகர் பிரிவு கிரிவேவ கிராம சேவகர் பிரிவு பஹிராவ கிராம சேவகர் பிரிவு ஹபரதவெல கிராம Read More

Read more

சகோதரனுக்காக ஆயுததாரிகளுடன் சண்டையிட்டுக் காப்பாற்றிய ஈழத்து தமிழ்ப் பெண்..!!

கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவில் மேற்கு ஹல்லில் கோடார்ட் கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸை 32 வயதுடைய ஈழத்து தமிழ் பெண் விஜிதா ஜெயதேவன் என்ற குடும்ப பெண் நடத்தி வருகின்றார்.இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆயுதமேந்திய குழு இவருடைய கடைக்குள் நுழைந்தது. இதன் போது தன்னையும் தனது சகோதரரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. Read More

Read more

கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 122 பேர்

பிரிட்டன் உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 122 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ஆயிரத்து 996 பேர் பயணித்துள்ளனர்.   இதன்படி இக் காலப்பகுதியில் 21 விசேட விமானங்கள் மூலம் ஆயிரத்து 254 Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள முக்கிய செய்தி – தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ட்டுநாயக்க விமான நிலையத்தில் duty free கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட பணியை முடித்த பின்னர் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையத்தின் வலைத்தளம் மூலம் பதிவு செய்து இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கம் ஒன்றையும் விமானநிலையம் அறிவித்துள்ளது.   தொலைபேசி இலக்கம் – 011 22263017   இணையத்தளம் – airport.lk

Read more

இணையத்தில் வெளியான 2021 கேடிஎம் ஆர்சி 200 ஸ்பை படங்கள்

[sg_popup id=”3786″ event=”inherit”][/sg_popup]கேடிஎம் நிறுவனத்தின் 2021 ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். கேடிஎம் ஆர்சி சீரிஸ் 2021 அப்டேட் செய்யப்பட்ட மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் புதிய ஆர்சி 200 விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய Read More

Read more

கலிபோர்னியாவில் தோன்றிய மர்மமான மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா? அல்லது ரசிகர்களின் செயலா?

உட்டா மற்றும் ருமேனியாவில் இதற்கு முன்பு தோன்றிய மர்மமான மோனோலித் கட்டமைப்புகள் மறைந்த பிறகு தற்பொழுது மூன்றாவது மோனோலித் கலிபோர்னியாவில் தோன்றியுள்ளது. 2020 இனிமேல் வீரியமடைய முடியாது என்று அனைவரும் நினைக்கத் துவங்கும் போது, மோனோலித்தின் தோற்றம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு, உட்டாவிலும், பின்னர் ருமேனியாவிலும் மோனோலித்கள் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மோனோலித் என்பது ஒற்றைக்கல் என்று அர்த்தம். இந்த மோனோலித் உருவங்கள் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், Read More

Read more

வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப்களுக்கு கொரோனா: தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப் என கொரோனா தொற்று அதிகரித்ததால் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. டி20 தொடரில் முதலில் நடைபெற்றது. இந்தத் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் கடந்த 4-ந்தேதியில் இருந்து வரும் 9-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 4-ந்தேதி Read More

Read more