நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மறுதினம் (04.02.2023) அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை(04/02/2023) இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அதன்காரணமாகவே, அன்றைய தினம்(04/02/2023) நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.