நாட்டில் 48 மணி நேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!!

தெற்கின் அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும்காவல்துறையினர் தெரிவித்தனர் . கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு, சம்பவம் இதுவாகும். பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் Read More

Read more

துப்பாக்கிச் சூட்டால் குறைந்தது 10 பேர் கொலை!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் Buffalo நகரிலுள்ள 18 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் அங்காடிக்குள் நுழைந்த இளைஞர், கையடக்கத் தொலைபேசி கெமரா ஊடாக ஒன்லைனில் தாக்குதலை நேரலையை ஔிபரப்பியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

Read more

அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் பல துப்பாக்கிச் சூடுகள்!!

அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் சற்றுமுன் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில் அலரி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அலரி மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு மக்கள் பிரவேசிக்க முற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் நீடிக்கும் நிலையில் துப்பாக்கிச் சூடு Read More

Read more

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு….. மூவர் படுகாயம்!!

நிட்டம்புவ பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மூவர் காயமடைந்துள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வாகனத்தை Read More

Read more

28 வயதுடைய நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை!!

மாத்தறை – கொஸ்கொட பகுதியில் நபரொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 28 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை, உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

பொதுமக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு….. 06 பேர் மரணம்,12 பேர் படுகாயம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமென்டோ நகரில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் அறுவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒலித்ததை அடுத்து மக்கள் தெருக்களில் ஓடினர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. “இது மிகவும் சோகமான சூழ்நிலை” என்று தலைமை காவல்துறை அதிகாரி கூறினார். இது Read More

Read more

திருகோணமலையில் துப்பாக்கி சூடு – மூவர் கைது….. ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்!!

திருகோணமலை – கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுவூற்றுப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்பட்டிருந்த போது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் நஜீம்கான் வசீம் வயது (30), ஸாகுல் ஹமீட் முகம்மது றமீஸ் வயது(30 )ஆகிய இருவரும் பலத்து காயத்துக்குள்ளாகியுள்னனர். மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு Read More

Read more

12 வயதான சிறுமி துப்பாக்கிச்சூட்டில் பலி!!

ஹப்புத்தளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கொண்டு, 12 வயதான சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் வீட்டு தோட்டத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.   சம்பவத்தில் காயமடைந்த சிறுமி சிறுமி சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை – கொஸ்லாந்தை – கெலிப்பனவளை பகுதியில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல்துறையினர் Read More

Read more

மர்ம நபரால் துப்பாக்கி சூடு…… இளம் பெண் மரணம்!!

வவுனியாவில் இளம்பெண் ஒருவர் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, நெடுங்கேணி – சேனைக்குளம் பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில், உணவருந்திவிட்டு செல்ல Read More

Read more