#New rules

LatestNewsTOP STORIES

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இனி புதிய நடைமுறைகள்!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தால் வெளியேறும் பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் நுழைவாயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக மேம்படுத்தல் திட்டங்கள் சிலவற்றை மேற்கொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி திட்டமிட்டுள்ளது. அதன்கீழ் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் “ஒரு அடையாள அட்டை” (One ID) எனும் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு முதலாவது முனையத்தின் Read More

Read More
LatestNewsTOP STORIES

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read More
LatestNewsTOP STORIES

வெளிநாட்டு மணமகன், மணமகளுக்கு காத்திருப்பவர்களுக்கு 2022 இலிருந்து புதிய விதிமுறைகளாக இலங்கை அரசு வைக்க்வுள்ள ஆப்பு!!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டும் எனும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உரிய விசா அனுமதிப் பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரமே அவசியமாக காணப்பட்டது. இருப்பினும், தேசிய பாதுகாப்புக்கு Read More

Read More
LatestNews

மண்டபங்கள், திரையரங்குகளிற்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள்….. ஓரளவு மகிழ்ச்சியில் அனைவரும்!!

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவால் இந்தப் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், திருமண மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு Read More

Read More
LatestNews

அனைத்து வணிக வளாகங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் திடீர் அனுமதி!!

சுகாதார பரிந்துரைகளின்படி நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சுகாதார சேவைகள் இயக்குநரால் நேற்று வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் அனைத்து வணிக வளாகங்களையும் மூடுமாறு கூறியுள்ளார். எனினும் இன்று குறித்த சுகாதார வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்திற்கு அமைய அனைத்து வணிக வளாகங்களும் திறக்கலாம். ஒரே நேரத்தில் 25 சதவீத வாடிக்கையாளர்களுக்கே இடமளிக்க முடியும் என்றும் கூறுகிறது. கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க Read More

Read More
LatestNews

மேலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சு!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக நேற்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்கட்டமைப்பு நிலையைங்கள், மசாஜ் பார்லர்கள், சிறுவர் பூங்காக்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கடற்கரையில் ஒன்றுகூடுதல், நீச்சல்தடாகங்களைப் பயன்படுத்துவதற்கும், எதிர்வரும் 31ஆம் திகதிவரை தடை விதிக்கப்படுவதாக புதிய சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More