யாழில் கொரோனா தொற்றாளர்களுடன் பயணித்த அறுவர் தலைமறைவு -வலைவீசும் பொலிஸார்

“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்ட வெள்ளவத்தை உணவக உரிமையாளர், மற்றும் Read More

Read more

யாழ்.மாவட்டத்தில் தனியார் கல்விநிலையங்களுக்கு பூட்டு – எடுக்கப்பட்டது தீர்மானம்

யாழ். மாவட்டத்தில் நாளை புதன்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், Read More

Read more

யாழ். குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ். குடாநாட்டின் பல பிரதேசங்களில் மின்தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த மின்துண்டிப்பு நாளையதினம் காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது. உயர் மின் அழுத்த – தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன் படி, சந்தர் கடையடி, கரவெட்டி, சாமியன் அரசடி, நெல்லியடி – கொடிகாமம் வீதி, கிழவி தோட்டம், இந்திர அம்மன் கோவிலடி, Read More

Read more

யாழ்ப்பாணத்து இளம் தலைமுறை தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட கவலை !

வடக்கில் போதைபொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தினை பொறுத்தவரைக்கும் போதைபொருள் பாவனை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது அதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது வடபகுதிக்கு கொண்டுவரப்படுகின்ற கஞ்சா மற்றும் ஹேரோயின் போன்ற பொருட்களை தடை செய்யப்பட வேண்டும். அதேபோல் அரசாங்கத்தின் பல வகையான கட்டுப்பாட்டு Read More

Read more

அவதானமாக இருக்கவும்! யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

தற்போதுள்ள காலநிலை மாற்றம் அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்குமெனவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள Read More

Read more

செல்வசந்திநி ஆலய தேர்த்திருவிழா தொடர்பில் வெளியாகிய மிக முக்கிய தகவல்

வரலாற்றுப் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா நாளைய செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது. மறுதினமான புதன்கிழமை காலை தீர்த்தத் உற்சவமும் இடம்பெறும். அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு கடந்த ஆவணி 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. திருவிழாக் காலங்களில் அன்னதானம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு Read More

Read more

தொலைபேசியால் காலையிழந்த பரிதாபம்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலுடன் சங்கத்தானை பகுதியில் தொலைபேசியில் உரையாடியபடி, தண்டவாளத்தில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் அவர் ரயிலுடன் மோதுண்டு கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த நபர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தண்டவாளத்திலிருந்து வெளியேற முயன்றபோதும், அவரது கால் தண்டவாளத்தில் சிக்கியுள்ளது. இதனால் அவரது காலொன்று துண்டிக்கப்பட்டது. தென்பகுதியை சேர்ந்த Read More

Read more

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு தொடர்பில் வெளியான தகவல்

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழக பேரவையின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே 15 ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அதற்கமைய கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் ஒன்று உரிய முறைப்படி நிரப்பப்படாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் Read More

Read more

நீர்வேலியில் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மீட்பு

நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று மாலை யுவதியையும் கூட்டிச்சென்ற பிரதான Read More

Read more

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி – 7634 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5545 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642 ஸ்ரீலங்கா Read More

Read more