இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டி அறிமுகம்!!

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி வெளியீட்டு விழா நிகழ்வு இன்று(17/08/2022) இடம்பெற்றது. இது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எரிசக்தி அமைச்சர் ‘கஞ்சன விஜயசேகர’ அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எரிசக்தி துறையில் மிகவும் தேவையான மாற்றங்கள் இடம்பெறுவதையும் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வெளியீட்டு விழா நிகழ்வு Read More

Read more

வெகுவாக குறைந்தன இலங்கைக்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை….. இது தான் காரணம்!!

விமான எரிபொருளை பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இலங்கைக்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையை உடனடியாக மாற்றி விமானப் போக்குவரத்துத் துறையை ஸ்திரப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த விசேட கலந்துரையாடலில் அனைத்து இலங்கை விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் விமான சேவைகள் Read More

Read more

100 000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இரு மாதங்களின் பின்னர் நாட்டிற்கு!!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இரண்டு மாதங்களுக்குப் பின் சுப்பர் டீசல் கொண்டுவரப்போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் 100 000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் மற்றும் டீசலுடன் இலங்கையை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, இது தொடர்பான காஞ்சன விஜயசேகர  அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.

Read more

யாழ் பல்கலையில் மாணவன், மாணவி மற்றும் பேராசிரியர் என மூவர்….. மூன்று காரணங்களிற்காக தற்கொலைக்கு முயற்சி!!

தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பாக மாறியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறை ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்பொன்றிற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால், அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது.   இந்நிலையில், துறைத்தலைவராக இருந்த பேராசிரியர் தனது தனிப்பட்ட Read More

Read more

“9 கோடியே 82 லட்சம் ரூபா” மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்ற கிளிநொச்சி பெண்!!

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்ற பெண்ணொருவர் மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்றுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இலங்கை நாணயத்தில் 9 கோடியே 82 லட்சம் ரூபா பரிசாக வென்றுள்ளார். தமிழ்நாட்டில் இருந்த அவர் திருமணத்திற்குப் பிறகு அபுதாபியில் வேலைக்குச் சென்றார். அங்கு வாங்கிய லொத்தர்சீட்டுக்கு ஒரு மில்லியன் அபுதாபி திர்ஹம்(Abu Dhabi Dirham) [98252277.32 ரூபாய்] கிடைத்துள்ளது. 80 லொத்தர் சீட்டுகளை வாங்கிய அருள்சேகரம் செல்வராணி என்ற பெண் விடுமுறைக்காக தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவரது லொத்தர் பரிசு தொடர்பில் Read More

Read more

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் முக்கிய செய்தி!!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாலித தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 27 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதால் நாட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து எரிபொருளின் விலையும் 70 ரூபாவால் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய கடந்த 15ம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்க Read More

Read more

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்ட சீனாவின் ஆராய்ச்சி கப்பல்….. தமிழகம் கடலோர பகுதிகளில் என்றுமில்லாத பாதுகாப்பு!!

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் “யுவான் வாங்க் 5”(Yuan Wang 5) நேற்றையதினம்(16/08/2022) நங்கூரமிட்டதை அடுத்து இந்தியாவின் தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு என்றுமில்லாவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது என பல பகுதிகளிலிருந்தும் செய்திகள் வெளியாகின்றன. கப்பலின் வருகை தொடர்பான Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……. 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் உடைய இந்த கண்காணிப்பு கப்பலில் அதி நவீன விண்வெளி ஆய்வு கருவிகள்  உள்ளதாகவும் விண்ணில் பறக்கும் செயற்கை கோள்களைக்கூட இந்த Read More

Read more

பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழை சிறுமி மீது பாலியல் வன்புணர்வு….. ஐவர் கைது – விசேட காவல்துறை குழுவின் தேடுதலில் இருவர்!!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் லக்கல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் லக்கல காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் பி.பி.ஏ.ரணவீர, சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதி காவல்துறை பரிசோதகர் கயானி பண்டார உள்ளிட்ட காவல்துறைகுழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. Read More

Read more

அவசர அவசரமாக பதறி ஓடிய தளபதி விஜய், பிரபு….. வைரலாகும் காணொளி (இணைப்புடன்)!!

நடிகர் விஜய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகின்றது. அதேபோல, தான் இந்த வீடியோவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்துள்ளது. இது தொடர்பான Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. தளபதி விஜய் மருத்துவமனைக்கு செல்வது போலவும் பதறி நடிகர் பிரபு Read More

Read more

பாடசாலை மாணவன் மீது நல்லூரில் அதிபர் கடுமையான தாக்கியதாக தகவ்ல்….. விசாரணைகளில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!!

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள பாடசாலையொன்றில் மாணவன் மீது அதிபர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதில் மாணவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர்   மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.   இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று(16/08/2022) Read More

Read more