வான் ஒன்றுடன் மோதியது பாரவூர்தி….. சிறுவன் மரணம் – 07பேர் படுகாயம்!!

திருகோணமலை – புத்தளம் வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்

சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு (19/04/2022) திருகோணமலையில் இருந்து ஹொரவ்பத்தானை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன்

சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வானில் பயணித்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் திருகோணமலை மற்றும் மகாதிவுல்வெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *