காவல்துறை காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வெலிக்கடையில் காவல்துறை காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25/08/2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தபிறப்பித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

19KG கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறை….. கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!!

19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 30 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் தற்போது 11 கிலோ கஞ்சாவை மட்டுமே காவல்துறையினர் நீதிமன்றில் ஒப்படைத்தனர். இது குறித்து எழுத்துபூர்வமாக காவல்துறையினர் தெரிவித்தபோது பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. பழுதடைந்த கட்டடம் Read More

Read more

கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார் ‘ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ’!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பில் இன்று(09/06/2022) இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நேற்று(08/06/2022) பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த Read More

Read more

திருகோணமலையில் தேடப்பட்ட்து யுத்த காலத்தில் விடுதலை புலிகளால் புதைக்கப்படட ஆயுதங்கள்!!

திருகோணமலை மாவட்டத்தின் – ஈச்சிலம்பற்று காவல்துறையினர் பிரிவின் விநாயகபுரம் பகுதியில் உள்ள வயல் பகுதியிலுள்ள மரமொன்றின் கீழ் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வியாழக்கிழமை (19/05/2022) மாலை மூதூர் நீதிமன்ற நீதிவானின் அனுமதியுடன் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது. காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது Read More

Read more

நடிகை “ஜூகி சாவ்லா”வுக்கு டெல்லி ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஜூகி சாவ்லா. இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் 1991-இல் வெளியான நாட்டுக்கு ஒரு நல்லவன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்களை தாண்டி சமூக சேவை, சுற்றுச்சூழல் என சில முன்னெடுப்புகளையும் எடுத்து வந்தார். சமீபத்தில் இவர் 5 Read More

Read more

விஜய் சேதுபதி மீது வழக்கு!!

சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது Read More

Read more

யாழிலும் மாவீரர் நாள் விளக்கேற்றலிற்கு தடை!!

நாள் நினைவேந்தல்களுக்கு முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் நீதிமன்ற தடையுத்தரவுகளை காவல்துறையினர் பெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. கோப்பாயில் மாவீரர் துயிலும் Read More

Read more

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு!!

தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் நிஜ Read More

Read more

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ பிடித்த கப்பலின் கப்டன் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்!!!!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் இன்று திங்கட்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு Read More

Read more

தீப்பற்றிய கப்பல் கப்டன் உட்பட மூவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!!!!

கொழும்பிற்கு அண்மித்த கடற்பரப்பில் தீபரவிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கப்டன், பிரதான பொறியியலாளர் மற்றும் பிரதி பிரதான பொறியியலாளர் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேவேளை, கப்பலில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் வருகை தந்த மீட்புப் பணியாளர்கள், கப்பலுக்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Read more