பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து….. ஆபத்தான நிலையில் 36 மாணவர்கள்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29/02/2024) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று(29/02/2024) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more

பாடசாலை மாணவர்களுக்கு இனிப்பான கசப்புச் செய்தி!!

தமிழர்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13/11/2023) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும் அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18/11/2023) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் Read More

Read more

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை….. முக்கிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27/10/2023) வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று(26/10/2023) வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை(27/10/2023) வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

Read more

பஸ் இல் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்த 16 வயது மாணவன்….. மின் கம்பத்துடன் சென்றது தலை!!

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில் நேற்று(20/08/2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் மின்கம்பத்தில் தலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். Read More

Read more

19 வயது மாணவி வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்வு….. மாணவி எடுத்த விபரீத முயற்சி!!

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குருநாகல் கட்டுபொத்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கா/பொ/த உயர்தரத்தில் இரண்டாம் வருடத்தில் இல் கல்வி கற்கும் மாணவியை வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக தெரிவித்து கட்டுபொத்த காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அத்துடன், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி சில மாத்திரைகளை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சியம்பலாவையில் வசிக்கும் கா/பொ/த உயர்தரத்தில் இரண்டாம் வருடத்தில் இல் கல்வி கற்கும் குறித்த Read More

Read more

ஊர்காவல்துறையில் 9 வயது மாணவிக்கு அதிபரால் நடந்த கொடுமை….. அதிபர் கைது – மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!!

யாழ் – தீவக வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிபரை ஊர்காவல்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாடசாலையில் வைத்து அதிபர் மாணவியை கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஊர்காவல்துறை காவல்துறையினர் நேற்று(16/07/2023) ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அதிபரை இன்று(17/07/2023) திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக Read More

Read more

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வீதியை விட்டு விபத்து….. மாணவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியில்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

இத்தாலியில் 17 வயதுடைய இலங்கை மாணவி வெட்டிக்கொலை….. சக வயது இலங்கை மாணவன் கைது!!

இத்தாலியின் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 17 வயதுடைய இலங்கை மாணவியை வெட்டி கொலைசெய்த குற்றச்சாட்டில் சக வயதுடைய இலங்கையை சேர்ந்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மரியா மிச்செல் கோர்சோ என்ற பாடசாலை மாணவியே படுகொலை செய்யப்பட்டவராவார். சந்தேகநபர் சடலத்தை மறைப்பதற்காக குப்பை மேடு ஒன்றிற்கு எடுத்துச் சென்றதை பார்த்து சந்தேகமடைந்த மற்றுமொரு இத்தாலியை சேர்ந்த இளைஞர் விசாரித்துள்ளார். அதற்கு பதிலளித்த இலங்கை மாணவர் தான் பெரிய மீன்களை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். எனினும், சந்தேகம் தீராத இளைஞர் Read More

Read more

சுற்றுலா சென்றதற்காக அதிபரால் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!!

கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25/06/2023) திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை(26/06/2023) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று முன்தினம்(27/06/2023) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர். Read More

Read more

பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக…… வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவித்தல்!!

மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது. அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் Read More

Read more