எதிர்வரும் வாரம் முதல் வடக்கின் பலபகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனகனமழை வரை கிடைக்கும் வாய்ப்பு….. மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பின்னர் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா ( Nagamuthu Pradeeparaja) எதிர்வு கூறியுள்ளார்.

இதன் காரணமாக,

எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக 03.03.2022 வியாழக்கிழமை,

04.03.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 05.03.2022 சனிக்கிழமை ஆகிய நாட்களில் வடக்கு மாகாணம் முழுவதும் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.

இது மாதிரிகளின் அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இக்காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதில்லை.

எனினும்,

மாதிரிகள் தாழமுக்கம் உருவாகும் சாத்தியத்தையே வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *