கொழும்பில் பாரிய தீ விபத்து! 15 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – புறக்கோட்டையில் ஆடை வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு காயமடைந்தவர்களில் 6 பேருக்கு கடும் தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர். கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். புறக்கோட்டை- 2ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடை Read More

Read more

யாழில் தீயினால் இரு குடும்பப் பெண்கள் மரணம்!!

யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்பவர் கடந்த 08ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரிய பணியில் இருந்து Read More

Read more

பண்டத்தரிப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 17வயது மாணவி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். யா/ மகாஜன கல்லூரியில் க.பொ.த.(சா/த) – 2021 இல் கல்விபயிலும் மாணவி செல்வி சுதர்சன் சதுர்சிகா என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளா‌ர். இன்னும் ஒருசில நாட்களில் அதாவது இமமாதம் 23 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றுவதற்காக மிக்க ஆர்வத்துடன் கற்றுவந்த மாணவியை காலன் கவர்ந்துவிட்டான். கல்விவானில் Read More

Read more

திடீரென நடுவீதியில் பற்றியெரிந்த கார்!!

கொழும்பு − தெமட்டகொட மேம்பாலத்தில் கார் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதை கொழும்பு தீயணைப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காரில் தீ பரவியுள்ளமையினால், குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கார் முற்றாக எரிந்துள்ளதுடன் சேத விபரம் தொடர்பில் இதுவரையில் வெளியாகவில்லை. இது தொடர்பான மேலதிக விபரங்கள், Twitter பதிவு மற்றும் காணொளிகளை Read More

Read more

5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகிய பாரிய தீ விபத்து!!

உடபுஸ்ஸலாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று (19) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன என்றும் உரிமையாளர்கள் கூறுகின்றனர். அதில், புடவைக் கடைகளும், பிளாஸ்டிக் கடைகளும் உள்ளடங்குவதாகவும், இதனால் ஏற்பட்ட சொத்து இழப்பு பல இலட்சங்களை தாண்டியுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தீ பற்றிய நேரத்தில் வேகமான காற்றும் வீசியதாலேயே இந்த கடைத் Read More

Read more

நள்ளிரவில் கருகிய நிலையில் தாயும் மகளும் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு (20 01.2022) தாயும் அவரது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் நடைபெற்றவேளை, குடும்பசுமை காரணமாக தந்தையும் மகனும் வெளிமாவட்டத்தில் கூலிவேலைக்கு சென்றிருந்தனர். 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி (07பிள்ளைகளின் தாயார்), அவரது மகள் Read More

Read more

இன்று அதிகாலை வவுனியாவில் பாரிய தீ விபத்து!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பிரபல மதுபான நிலையத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.50 மணியளவில் குறித்த நிலையத்தில் தீ பற்றிய நிலையில் வவுனியா நகரசபை தீ அணைக்கும் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தீ கட்டிடம் முழுவதும் பரவியது. தீ விபத்து தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

நியுயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து -குழந்தைகள் உட்பட 19 பேர் கருகி பலி (படங்கள்)

பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியுயோர்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நியுயோர்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 19 மாடிகள் இருந்தன. நேற்று இந்த கட்டடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ Read More

Read more

திடீரென 03 மாடி பயணிகள் படகில் ஏற்பட்ட தீ – 37 பேர் உயிரிழப்பு, 100 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில்…… பங்களாதேஷில் சம்பவம்!!

பங்களாதேஷில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர். படகு விபத்திற்குள்ளான போது அதில் 500 பேர் இருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களில் சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Jhakakathi பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 03 மாடிகளைக் கொண்ட பயணிகள் போக்குவரத்து படகில் முதலாவது என்ஜின் அறையில் தீ பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. 310 பேர் மாத்திரமே பயணிக்கக்கூடிய Read More

Read more

ஜப்பானின் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தீ….. 27 பேர் இதுவரையில் பலி!!

ஜப்பான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 உயிரிழந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், பல்வேறு வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தில் Read More

Read more