பஸ் இல் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்த 16 வயது மாணவன்….. மின் கம்பத்துடன் சென்றது தலை!!

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில் நேற்று(20/08/2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் மின்கம்பத்தில் தலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். Read More

Read more

சுற்றுலா சென்றதற்காக அதிபரால் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!!

கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25/06/2023) திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை(26/06/2023) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று முன்தினம்(27/06/2023) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர். Read More

Read more

கடடாயமாக்கப்பட்ட்து “Covid-19 Vaccinated Record Card”!!

சுற்றுலா செல்வோர் கட்டாயம் தடுப்பூசி அட்டைகளை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமான சுற்றுல மையங்களுக்கு செல்லும் போது பூரணமாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க (Dhammika Wijesinghe) தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுற்றுலா மையங்களில் தடுப்பூசி அட்டைகளை பரிசோதனையிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். Read More

Read more

பாரிஸ் இற்கு இனி நேரடி விமான சேவையை முன்னெடுக்கவுள்ள Sri lankan Airlines!!

சிறிலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என சிறிலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more