இலங்கையில் மீண்டும் இன்று 2.3 ரிச்டர் அளவு நில நடுக்கம்….. இது எதற்கான அறிகுறி!!

இலங்கையில் மீண்டும் இன்றையதினம்(11/02/2023) காலை நில நடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட வெல்லவாய, புத்தலையில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 2.3 ரிச்டர் அளவில் இடம்பெற்றுள்ளதுடன், எந்தவிதமான உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம்(10/02/2023) மொனராகலை மாவட்டத்தில் 3.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் Read More

Read more

இலங்கைக்கு நிதி வழங்க உலக வங்கி திடடமிடவில்லை….. இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர்!!

போதுமான பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபரிஸ் எச். ஹடாட்-ஜெர்வோஸ்(Faris H. Hadad-Zervos) குறிப்பிட்டுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் குறித்த அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். வங்கியானது இலங்கையின் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு Read More

Read more

நிகழ்வுகளை மண்டபங்களில் நடத்த காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!!

திருமண மண்டப மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இது பொருந்தாது என்றும் இன்று முதலே இந்த 40 சதவீத விலை உயர்வு தேவை என்று அவர் Read More

Read more

வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றம்!!

சிறிலங்கா நாடாளுமன்றில் மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.   வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.   வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.   இதனையடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தன.   இருப்பினும் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF Read More

Read more

சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை!!

இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.   அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.   வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.   சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக Read More

Read more

அரியாலையில் பெண்னொருவர் ஹெரோயினுடன் கைது!!

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் பெண் ஒருவர் நேற்று பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இதன் உள்ளூர் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கைது செய்யப்பட்ட பெண் 33 வயதுடைய அரியாலை பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பெண் கொழும்பில் இருந்து யாழிற்கு பேருந்து மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்து, Read More

Read more

கணவரின் தாக்குதலால் மானைவி மரணம், பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு தீ மூட்டிய கணவர்!!

இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம பகுதியில் பெண் ஒருவர் தனது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது, கனமான பொருளினால் குறித்த கணவர் மனைவியின் தலையில் தாக்கியதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர் கோனார முதியன்சேலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தயா நிஷாந்தி ஹரிச்சந்திர ( 37 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரான கணவர் ( 27 Read More

Read more

“Booster” தடுப்பூசி இன்று (01/11/2021) முதல் வழங்கப்படுகின்றது!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தில் இன்று (01) முதல் பூஸ்டர் (Booster) தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றி 6 மாதங்கள் கடந்தோருக்கே பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக சுகாதாரத்துறை, முப்படையினர், பொலிஸார், விமான நிலைய ஊழியர்கள், சுற்றுலாத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை வழங்கப்படுவோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனிடையே, நேற்று 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே பெரும்பாலானோர் தொற்றுடன் Read More

Read more

தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையில் குறைந்த அழுத்த பகுதி!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய Read More

Read more

யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம்!!

யாழ் கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். முதலில் யாழில் இருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழிற்கு ஒரு சேவையுமாக சாதாரண புகையிரத சேவை மாத்திரமே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார். கல்கிசை காங்கேசன்துறைக் கிடையிலான புகையிரத சேவை எதிர்வரும், 3ஆம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்தார். எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஐந்து முப்பது மணிக்கு கல்கிசையில் Read More

Read more