“கோட்டா கோ கம”விற்கு சைக்கிளில் வன்னியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த நபர்!!

காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது – 32) என்ற நபர் விசுவமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

குறித்த துவிச்சக்கர வண்டிப் பயணம் நேற்று (20/05/2022) மாலை வவுனியாவை சென்றடைந்தது.

வவுனியாவை அடைந்த அவர் இன்று (21) அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்தார்.

கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,

நாட்டு மக்களின் நலன் கருதியும்,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும்,

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக் கோரியும் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *