சுற்றுலா சென்றதற்காக அதிபரால் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!!

கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25/06/2023) திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை(26/06/2023) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று முன்தினம்(27/06/2023) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர். Read More

Read more

தடியால் இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை!!

கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தடியால் தாக்கப்பட்டு ஓருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்று மாலை 4: 30 மணியளவில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரு Read More

Read more