தமிழர் உரிமைப் போரில் உயிர்நீத்தோருக்கான நினைவேந்தலுக்கு….. பொருட்களை சேகரிக்க யாழ் பல்கலை மாணவர்களின் புதிய திட்டம்!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை. அந்தவகையில், இவ்வாண்டும் மாவீரர் வார நாள் நிகழ்வுகளை தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசங்களும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Read More

Read more

கனடாவில் ஈழத்தமிழருக்கான நினைவுத் தூபியின்(முள்ளிவாய்க்கால்) மாதிரிவடிவத்தை அமைப்பதற்கு அந்தநாட்டு அரசு அனுமதி!!

முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு அழித்துச் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழருக்கான நினைவுத் தூபியின் மாதிரிவடிவத்தை பிறம்ரன் பெருநகர் இன்று உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை கனடா பிரம்ரன் மாநகரசபை உருவாக்க முன் வந்துள்ளது. கனடாவின் புகழ் பூத்த பூங்காவான செங்கூசி பூங்காவில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கி தமிழ் மக்களுக்கு தந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த மிகப் பெரிய இனவழிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனப்படுகொலை இருந்த போதிலும், அதனை Read More

Read more

முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளார்கள். மண்ணெண்ணைய் இல்லாத நிலையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்ணெண்ணை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள். இன்று(26/05/2022) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலகம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். Read More

Read more

“கோட்டா கோ கம”விற்கு சைக்கிளில் வன்னியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த நபர்!!

காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது – 32) என்ற நபர் விசுவமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த துவிச்சக்கர வண்டிப் பயணம் நேற்று (20/05/2022) மாலை வவுனியாவை சென்றடைந்தது. வவுனியாவை அடைந்த அவர் இன்று (21) அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்தார். கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டு மக்களின் நலன் Read More

Read more

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நினைவேந்தல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் ஆத்மார்த்தரீதியாக பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மாணவர்களாலும் பல்கலைக்கழக ஊழியர்களாலும் மலரஞ்சலி செலுத்த்தியதோடு ஈகைச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கமும் இடம்பெற்றது.

Read more

நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம்… வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்….. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு!!

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை “நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம். வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு மரபுவழியான தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடுகள் மீதான புற வல்லாதிக்கத்தை நாம் பலதசாப்தங்களாக அனுபவித்து, வந்திருக்கின்றோம். இந்த நிலையில் உலக ஒழுங்கியலுக்கு ஏற்றவாறான, நியாயமான எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பல்வேறு தளங்களில், வடிவங்களில் முன்னகர்த்தி ஈழத் தமிழர்களாகிய நாம் இன்றுவரை போராடிய வண்ணம் Read More

Read more

14 வயது சிறுமி கிணற்றுள் வீழ்ந்து பலி!!

முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(07/03/2022) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்தே சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று(08) இடம்பெறவுள்ளன. வீட்டின் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யாமரத்தில் பழம்பறிக்க ஏறிய பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 Read More

Read more

பாரவூர்தி மோதியதில்….. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்!!

கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக  காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் Read More

Read more

13 வயது சிறுமியின் கொலை தொடர்பில் – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்த உண்மை!!

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா கடந்த Read More

Read more

முல்லைத்தீவு நாயாற்றில் கவிழ்ந்தது கடற்படையின் படகு!!

முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்த கடற்படை படகு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது காவல்துறையினர் தெரிவித்துள்ளார். நாயாறு கடற்படை முகாமில் இருந்து கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு நேற்றைய தினம் பிற்பகல் ஒரு மணியளவில் கடற்சீற்றம் காரணமாக கவிழ்த்துள்ளது. சட்டவிரோத மீன்பிடி படகுகளை கண்காணிக்கவென கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு கடற்சீற்றம் காரணமாக கவிழ்த்துள்ளது இந்த படகில் மூன்று கடற்படையினர் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்ததும் ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதோடு மற்றய Read More

Read more