பெண் குழந்தையை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் Covid-19 தொற்றால் மரணம்…. யாழ். போதனா மருத்துவமனையில் நடந்த துயரம்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடன் யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். “கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் Read More

Read more

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்….. காரணம் கொவிட்-19

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்றையதினம் மேற்கொண்டார். சடலத்தை Read More

Read more

மற்றுமோர் சாதனை படைத்தது யாழ். போதனா வைத்தியசாலை!!

வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தினால் மூளைச்சாவடைந்து உயிரிழந்த இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன் என்கிற இளைஞர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நோயாளிகளுக்கு மாற்றப்பட்டது. சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் உயிர் வாழ்ந்த இருவருக்கும் சிறுநீரகங்கள் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை நிபுணர்கள், உணர்வழியியல் நிபுணர்கள், சிறுநீரக நிபுணர்கள் மூலம் மாற்றப்பட்டது. கண்டியிலிருந்து சத்திரசிகிச்சை நிபுணரொருவர் அழைத்து வரப்பட்டு உதவிகளும் பெறப்பட்டது. அதிகரித்த Read More

Read more

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த மிரட்டல் அழைப்பு!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்கவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருத்துவமனை பதில் பணிப்பாளருக்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் Read More

Read more

விஷம் குடித்த காதலர்கள், காதலன் பலி காதலி வைத்தியசாலையில்-காரணம் காதலுக்கு பெற்றோர் சம்மதமின்மை!!

யாழில் தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் விபரீத முடிவெடுத்து மருந்து குடித்ததில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரியவருகின்றது. மச்சான் மச்சாள் உறவுமுறைகொண்ட 19 வயது ஆணும் 17 வயதான பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். குடும்பப் பகைமை காரணமாக இருவரது காதலையும் பெற்றோர் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் 19 வயதான குறித்த காதலன் மருந்து போத்தல் ஒன்றை வாங்கி அதில் அரைவாசியை தான் குடித்துவிட்டு மிகுதியை தனது காதலியான Read More

Read more

கருத்து முரண்பாட்டால் தமையனின் காதை கடித்த தம்பி- மண்டையை பதம்பார்த்த அண்ணன்!!

தென்மராட்சி-நாவற்குழிப் பகுதியில் அண்ணன், தம்பி இடையே இடம்பெற்ற மோதலில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குழிப் பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் அண்ணனின் காதை தம்பியார் கடித்து காயப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அண்ணன் அருகில் இருந்த தராசினை தூக்கி தம்பியின் தலையில் தாக்கியுள்ளார். தலை மற்றும் காதுப் பகுதியில் படுகாயமடைந்த 32 மற்றும் 37 வயதான சகோதரர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். Read More

Read more

வட மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வராவிட்டால் அபிவிருத்தி செய்ய முடியாது – சுகாதார அமைச்சர்!!

வட மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் சிலவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கப்பட்டது மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான திட்ட வரைபு, வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தாலும், போதுமான நிதி உதவி கிடைக்காததால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமற்போனதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். எவ்வாறாயினும், Read More

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோர்க்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சை நிலையத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளர்களுக்க வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தல் ஒன்று விடுத்தள்ளது. தற்போது நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சை நிலையத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்களை தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். எனவே இன்றிலிருந்து யாழ் போதனா Read More

Read more

யாழில் தமிழ் வைத்தியரின் நெகிழ்ச்சியான செயல்! தென்னிலங்கை மக்களின் பாராட்டு!!

வெசாக் காலப்பகுதியை முன்னிட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் விசேட கண் வைத்தியர் எம். மலரவன் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார். பல்வேறு கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் ஏழ்மையான 2000 பேருக்கு கண் சத்திர சிகிச்சை செய்யும் புண்ணிய செயலை அவர் ஆரம்பித்துள்ளார். தென்னிலங்கை மக்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் நெருக்கமான தமிழ் வைத்தியராக மலரவன் உள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண வைத்தியசாலையில் ஒவ்வொரு வருடமும் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் வைத்தியர் மலரவன் தவறமாட்டார் Read More

Read more

யாழில் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கிய குடும்பப்பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த யோகேஸ்வரன் அருந்தினி (வயது-37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார். வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப்பந்தலின் கால் ஒன்றில் குடும்பப்பெண் பிடித்துள்ளார். அதில் மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின்இணைப்பில் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற Read More

Read more