இந்திய மீனவர்களின் 105 படகுகள் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானம்!!

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை கடற்படை பறிமுதல் செய்து வருகின்றது. இதற்கமைய 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் பகிரங்க ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஏலம், எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், Read More

Read more

“தனது வேலை நேரம் முடிந்து விட்டது” என கூறி பாதி வழியில் விமானத்தை நிறுத்தி சென்ற விமானி!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமானத்தை, தனது வேலை நேரம் முடிந்து விட்டது என கூறி சவுதி அரேபியாவில் பாதி வழியிலேயே விமானத்தை நிறுத்திவிட்டு விமானி ஒருவர் கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்ரநஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் (PK-9754 ) ஒன்று ரியாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இடையே வானிலை மோசமடைந்ததால் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அந்த விமானத்தை விமானி அவசரமாக தரையிறக்கினார். Read More

Read more

இந்திய – பாகிஸ்தான்  எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு!!

இந்திய – பாகிஸ்தான்  எல்லையான லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக்குண்டு வெடிப்பானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், குறைந்தது 3பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. “வெடிப்பின் தன்மையை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை அதிகாரி Read More

Read more

இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கொடுத்தது இந்தியா!

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பெருந்தொகை நிதியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இதில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கிளியரிங் யூனியன் செட்டில்மென்ட் கட்டமைப்பின் கீழ் செலுத்த திட்டமிடப்பட்ட மற்றொரு 500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.    

Read more

173 கொரோனா நோயாளிகளுடன் இத்தாலியிலிருந்து வந்த விமானம்!!

இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாபுக்கு ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து அவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Read more

சட்டவிரோதமாக இலங்கை வர முயன்றவர் கைது!!

தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிவர முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு தனுஷ்கோடி – மெரைன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் விசா முடிந்ததால் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருவதற்கு தனுகோடிக்கு வந்துள்ளார். சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மெரைன் காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்தனர். Read More

Read more

இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் மரணம் பதிவு!!

இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணம் இது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரோன்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

பெரும் வைரல் ஆகியுள்ள சூர்யா, பிரியங்கா அருள் மோகனின் “உள்ளம் உருகுதையா……”!!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.   இப்படத்தின் பர்ஸ்ட் Read More

Read more

102 ஆண்டு ஆனாலும் பழி வாங்க ‘2ம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக’ பரபரப்பு காணொளி விடுத்த இந்தியர் என கூறும் மர்மநபர்!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை (Queen Elizabeth) கொலை செய்யப்போவதாக இந்திய நபர் ஒருவர்  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் 1919ம் ஆண்டு பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரித்தானிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது பிரித்தானிய இராணுவத்தினர் சுதந்திர போராட்டக்காரர்கள் மீது 1,650 முறை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த துயர நிகழ்வு இந்திய வரலாற்றில் Read More

Read more

“கபில்தேவ்” குறித்த திரைப்படத்திற்கு வரி விலக்கு……. டெல்லி அரசு அறிவிப்பு!!

வரும் 24ம் தேதி வெளியாக உள்ள ‘83’ திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டில் முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு ‘83’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. கபீர் கான் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். Read More

Read more