படகு கவிழ்ந்ததில் காணாமல்போன கடல் தொழிலாளர்கள்….. தீவிரமாக தேடல் நடவடிக்கைகள்!!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீன்பிடிச்சென்ற ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் இருவர் உயிர்தப்பியுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்ற போதும் நேற்று(30/01/2023) இரவு மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிச்சென்றவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது. நேற்றைய தினம்(30/01/2023) மீன்பிடி திணைக்களத்தினால் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் குறித்த கடற்றொழிலாளர்கள் குடும்ப வறுமை காரணமாக மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், கடல் கொந்தழிப்பு காரணமாக படகு கவிழ்ந்துள்ள நிலையில் இருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளதுடன் ஒருவர் Read More

Read more

முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளார்கள். மண்ணெண்ணைய் இல்லாத நிலையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்ணெண்ணை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள். இன்று(26/05/2022) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலகம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். Read More

Read more

இலங்கையில் இழுவை படகு ஒன்றில் பிடிபட்ட்து 800 கிலோ பாரிய சுறா மீன்!!

வெலிகம, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் 800 கிலோ கொண்ட பாரிய சுறா ஒன்று 176,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. “சோஹன்சா” என்ற பல நாள் இழுவை படகு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​கடற்கரையில் இருந்து இருபத்தைந்து கடல் மைல் தொலைவில் மீன்பிடி வலையில் சுமார் 800 கிலோ எடையுள்ள சுறா சிக்கியது.B இல்லை அதன்பின், 15 மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த சுறாவை இழுத்துச் சென்ற படகின் மீனவ தலைவர் ரஞ்சித் அபேசுந்தர மற்றும் மீனவர்கள் குழுவினர் Read More

Read more

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 21 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!!

இலங்கை அரசை கண்டித்தும், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 50க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சினை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், Read More

Read more

“அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்”….. போராட்ட களத்தில் உயிரிழந்த மீனவர்களின் ஆத்மா கருத்து!!

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன் “அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்” என ஒருவர் கோரிக்கை விடுத்து மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் ஐந்தாவது நாளாக நேற்றைய தினமும் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கருப்பு உடை தரித்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து Read More

Read more

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமராட்சி மீனவர்கள்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர். அந்நிலையில், நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை Read More

Read more

பொலிகண்டி ஆலடியில் படகுகளை எரித்து போராட்டத்தில் மீனவர்கள்!!

தமக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி வேண்டியும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கடற் தொழிலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக பொலிகண்டி ஆலடிப் பகுதியில் தமது படகுகளை எரித்து போராட்டத்தை கடற் தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்திய இழுவைப் படகுகளை அனுமதிக்க கூடாது என்றும், உயிரிழந்த இரண்டு கடற் தொழிலாளர்களுக்கு நீதி கோரியும், அமைச்சர் இதற்கான நடவடிக்கையை எழுத்து மூலம் வழங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் யாழ். செயலகம் Read More

Read more

ஏ9 வீதியை முடக்கினர் மீனவர்கள்……. அமைச்சர் டக்ளஸ் சென்றதால் பதற்ற நிலை!!

இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்றைய தினம் காடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அத்துமீறும் இந்திய படகுகளை கைப்பற்றக் கோரியும், உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஏ9 Read More

Read more