மாலுசந்தியில் ஆட்டோ – மோ. சைக்கிள் விபத்து….. 3 மாணவிகள் உட்பட 5 பேர் படுகாயம்!!

வடமராட்சி மாலுசந்தி வீதியில் நாய்கள் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ, மோட்டார் சையிக்கிள் விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி மாலுசந்தி வீதியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் 3 மாணவிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் , மாலுசந்தியில் இருந்து மந்திகை நோக்கி சென்ற ஆட்டோ தனியார் கல்வி நிலையம் தாண்டி சிறிது தூரத்தில் நாய்கள் கூட்டம் Read More

Read more

விக்னேஸ்வரா கல்லூரி வீதி நீர் வடிகால் சம்பந்தமான கூட்டம் இன்று!!

நாளைய தினம் நடைபெறவுள்ள கரவெட்டி விக்னேஸ்வரா வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியை நீர் வடிகால் செய்யாமல் புனரமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. நீர் வடிகால் செய்யாமல் வீதி அபிவிருத்தி நடைபெற்றால் நெல்லியடி பிரதான வீதியால் வரும் வெள்ளம் முதல் அனைத்து வெள்ள நீரும் கரவெட்டி இராஜ கிராமம் மற்றும் மத்தொணி கிராமங்கள் உட்பட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகும் Read More

Read more

நெல்லியடி, கரணவாய் மேற்கு பகுதியில்….. 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் மேற்கு, அந்திரான் பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நேற்றிரவு (23) குறித்த சம்பவமானது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Read more

நெல்லியடி, பருத்தித்துறை பொலிஸார் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து கொட்டும் மழையிலும் கொரோனா விழிப்ப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்

இன்றைய தினம் நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸாரினாலும் சுகாதார உத்தியோகத்தர்களினாலும் முன்னெடுக்கப்படட கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் கொட்டும் மழையிலும் உற்சாகத்துடன் நடைபெற்றிருந்தது மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற இந்த செயற்பாடு பாராட்ட தக்கதாகும் அத்தோடு மூன்று சில் மோட்டர் வாகனங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மீட்டரான வாழ்க்கை என்ற ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டது அவை சம்பந்தமான படங்கள்.    

Read more