#Medicine

FEATUREDLatestNewsTOP STORIES

பிரபல போதனா வைத்தியசாலையில் சிசேரியன் மயக்க மருந்து இல்லை….. பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படும் கர்ப்பிணித் தாய்மார்!!

அத்தியாவசியமான மார்கெய்ன்(Margin) என்ற மயக்க மருந்து தீர்ந்துவிட்டதால் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதுடன் சிசேரியன் சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வைத்தியசாலையில் பதினேழு மார்கெயின் குப்பிகள்(Margin Cubes) மட்டுமே உள்ளதாகவும், அவசர நோயாளிகளுக்குப் பயன்படுத்தினாலும் இரண்டு நாட்களுக்குப் போதாது எனவும் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனை மருத்துவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து மருத்துவமனை பணிப்பாளர் கருணாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவுக்கு வைத்தியசாலையின் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஓகஸ்ட் மாத இறுதிக்குள் மருந்து தட்டுப்பாடு தீர்க்கப்படும்….. சுகாதார அமைச்சர்!!

இலங்கையில் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் மருந்து தட்டுப்பாடு தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தீர்க்கப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பி வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இலங்கை அண்மைக்காலமாக மருத்துவத்துறையில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ள நிலையில் தற்போதய நிலவரப்படி எதிர் காலத்தில் மருந்து தட்டுப்பாடு தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளர். இலங்கையில் உள்ள மருத்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

புற்றுநோய் நூறு சதவீதம் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் மேன் ஹட்டான் இல் உள்ள நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 100 சதவீதம் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் கீமோ தெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தை கொடுத்து நோயாளிகளை 100% புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர். இந்த மருந்து, மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முற்றிலும் நோயிலிருந்து குணம் Read More

Read More
LatestNewsTOP STORIES

பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர் யாழ் போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதன்படி, இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன் தேசிய மருந்து தட்டுப்பாடு அபாய நிலை காரணமாக சத்திர சிகிச்சை கூட செயற்பாடுகளை பாரிய அளவில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும், அவசர நரம்பியல் சத்திர சிகிச்சைகளும் Read More

Read More
LatestNewsTOP STORIES

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அவசர அறிவித்தல்!!

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு உதவ சுகாதார அமைச்சு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இதன்படி, மருந்துகளைப் பெறுவது தொடர்பான புகார்கள் மற்றும் சிக்கல்களை 1999 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை தற்போது கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளமை Read More

Read More
LatestNewsTOP STORIES

இந்தோனேசிய அரசாங்கம் மூலம் 570 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் கிடைத்தது!!

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தோனேசிய அரசாங்கம் முதன்முறையாக 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களையும் சத்திரசிகிச்சை உபகரணங்களையும் நேற்று மாலை (28/04/2022) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவித் தொகை 3100 கிலோகிராம் எடையுடையது. இந்த மருத்துவ உதவித் தொகையில் குறிப்பாக புற்றுநோயாளிகளுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு Read More

Read More
LatestNewsTOP STORIES

மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை அவசியம்….. GMOA!!

இலங்கையில் மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். மேலும், “விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை நடைமுறையில் உள்ளபோதும், சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை. அவ்வாறு மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில் Read More

Read More
LatestNewsTOP STORIES

5 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட் 180 அத்தியாவசிய மருந்துகள் இல்லை….. அரசு அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும்!!

தெற்காசிய பிராந்தியத்தில் வலுவான பொது சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருந்த இலங்கை தற்போது மிக மோசமான சுகாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், அரசாங்கம் அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவித்து வெளிநாடுகளின் உதவியை பெறவேண்டுமென இலங்கையில் உள்ள மருத்துவ தொழிற்சங்கங்கள் அவசர கோரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளில் 5 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய அவல நிலை மருத்துவமனைகளில் நோயாளர்கள் மரணமடையும் Read More

Read More
FEATUREDLatestNews

மருந்துகளுக்கு தட்டுப்பாடு: சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை

சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடிதம் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் சகல தரப்பினரையும் அழைத்து ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் Read More

Read More
LatestNewsTOP STORIES

மருந்துகளின் விலையை 20% உயர்த்த அனுமதி!!

மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மருந்துகளின் விலையை 20% உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஏற்கனவே விலை உயர்த்தப்பட்ட மருந்துகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது என்று NMRA தெரிவித்துள்ளது. இவ்வாறு நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டின் சகல பகுதிகளிலும் ஆர்ப்பாடங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More