குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் Read More

Read more

பரீட்சைக்கான புதிய திகதி எப்போது? கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலையடுத்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பரீட்சைக்கான புதிய திகதியை அறிவிப்பதாகவும் அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் Read More

Read more

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read more