யாழில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது….. அரச பாடசாலை ஒன்று!!

யாழ்ப்பாணம் – நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இருப்பினும், இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!!

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருப்பினும் 2022 முதல் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை 2023 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி முடிவடையும். இதனை தொடர்ந்து, பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்த பின்னர் 2023 Read More

Read more

பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை….. கல்வி அமைச்சு!!

அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் கப்பல் வருவது மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் செய்தியே இதற்குக் காரணமாக கூறப்படுகின்றது.   எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் நகர்ப்புறங்களில் நடத்த முடியுமா Read More

Read more

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ‘அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படும்’….. கல்வி அமைச்சு!!

கொழும்பு நகர எல்லையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலைகளுக்கு இணைய வழி கல்விக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது .

Read more

திங்கட்கிழமை முதல் இரு வாரத்திற்கு ‘பாடசாலைகள்’ மற்றும் ‘பொதுத் துறை அலுவலகங்கள்’ இணையவழியில்!!

இலங்கை அரசாங்கம் திங்கட்கிழமை (20/06/2022) முதல் பொதுத் துறைக்கு இரண்டு வார கால வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   இதன்படி, அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தையும் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வார கால இணையவழி கற்றல் முறை திட்டத்தையும், நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சும், அரச நிர்வாக அமைச்சும் இதற்கான Read More

Read more

பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பம்….. ஆனால் மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் பிரச்சினை!!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நாளை முதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு Read More

Read more

சாதாரண தரப் பரீடசை எழுதும் “மாணவி” ‘பரீட்சை கண்காணிப்பாளர்’ ஒருவரால் பலாத்காரம்!!

நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர் ‘நச்சதுவ’வில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதன்கிழமை (25/0/202) பரீட்சை நிலையத்தில் வைத்து குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திகதியில் நடைபெற்ற வரலாறு பரீட்சை தொடர்பான கேள்விக்கு உதவி செய்கிறேன் என்ற போர்வையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த மாணவி அன்றைய தினம் பாடசாலையில் உள்ள ஆசிரியை Read More

Read more

கொழும்பில் பதற்றம்….. மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!!

கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர் பேரணியானது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, பெருந்திரளான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களில் சிலர் கோட்டா கோ கமவில் உள்ள நூலகத்திற்கு சில புத்தகங்களை கையளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுமதி அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ளாத மாணவர்களை  WWW.DOENETS.LK  ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அனுமதி அட்டையின் பிரதியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிரவரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் Read More

Read more