உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதி அறிவிப்பு – இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றன…… கல்வி அமைச்சர்!!

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரங்களில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகாத நிலையில் பரீட்சைகள் நிறைவடைந்து ஆறுமாதங்கள் கடந்து விட்டது.   இந்நிலையில், உயர்தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்ட இந்தத் தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு இன்று(03/08/2022) அறிவித்துள்ளார். Read More

Read more

புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்படடன….. அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் அறிவிப்பு (முழுமையான விபரங்கள்)!!

புதிய அமைச்சு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன், குறித்த அமைச்சுகளின் கீழ் நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுள்ளது. இன்றைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி பின்வரும் அமைச்சு பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன . மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சு. சமூக வலுப்படுத்துகை அமைச்சு. தொழிநுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு.   இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழிநுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் Read More

Read more

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்….. கல்வி அமைச்சர்!!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார். 2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதி வரை இந்த வருடம் பாடசாலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான Read More

Read more

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன, நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் இராஜினாமா!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். மஹிந்த ராஜபக்சவை தொடர்ந்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு!!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல உயர் Read More

Read more

சில அமைச்சுகளுக்கான துறைகளில் திருத்தம் !!

அதிவிசேட வர்த்தமானி மூலம் சில அமைச்சுகளுக்கான துறைகள், பொறுப்புகள் மற்றும் நிறுவனங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானிக்கு அமைய நிதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கிய அமைச்சுகளில் நிதி அமைச்சு மாத்திரம் தனியான அமைச்சாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் என்ற புதிய அமைச்சும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கை வகுப்புத் திணைக்களம், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் Read More

Read more

இலங்கை கடற்பகுதியில் இந்தியமீனவர்கள் மீன்பிடிக்க இலங்கை அரசு அனுமதி?

இலங்கை கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்கும் ஒரு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தற்போது கடற்றொழில் அமைச்சகம் இந்திய அரசுடன் கலந்துரையாடி வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்படி இழுவைமடித்தொழில்முறைமை செய்யக்கூடாது என்ற கடும் நிபந்தனையுடன் கட்டணம் செலுத்தி அனுமதிபெற்று இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர். இதேவேளை “எமது கடற்பகுதியில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டி,வந்து மீன்பிடிக்கின்றனர். அடுத்து இழுவை மடிவலைகள் மூலம் நமது கடல் Read More

Read more