#GCE A/L Examination

FEATUREDLatestNewsTOP STORIES

வெளியாகவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read More
FEATUREDLatestNews

பரீட்சைகள் மற்றும் விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,  தரம் 3 மாணவர்களுக்கான பாடசாலைகளை நடத்துவதற்கான தேவைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வரும் அதேவேளை, தினசரி கல்வி நடவடிக்கைகளில் இருந்து தரம் 01 Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்….. கல்வி அமைச்சர்!!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார். 2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதி வரை இந்த வருடம் பாடசாலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான Read More

Read More
LatestNewsTOP STORIES

உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைகளில் தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (06/04/0222) செய்முறை பரீட்சைகள் இடம்பெற்ற நிலையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிடட முக்கிய தகவல்!!

2021இற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், குறித்த கால கட்டத்தில் பாடசாலைகளில் ஆரம்ப தரத்திற்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்ப தரத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது பரீட்சை சூழலை பேண முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அத்தகைய, பாடசாலைகளின் Read More

Read More